? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:1-10

நற்செய்தியைக் கூறு

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் லூக்கா 8:8

தேவனுடைய செய்தி:

ஒருவர் விதைகளை விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன, சில விதைகள் பாறைமீது விழுந்தன, சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன, இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.

தியானம்:

பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் இயேசுவோடு இருந்து ஊழியஞ்செய்தார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இயேசுவை உண்மையாகவே நேசிக்கும் அனைவரும் அவருடன் ஊழியம் செய்ய முன்வருவார்கள்.

பிரயோகப்படுத்தல் :

இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுடன், நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறி, பிரசங்கித்து வந்தார். இன்று இப்படி கீழ்ப்படிந்து நடப்பவர்களை அறிந்துள்ளீர்களா?

தங்கள் உடைமைகளைக் கொண்டு இயேசுவுக்குப் பணிவிடை செய்துவந்த பெண்கள் யார் யார்? வசனம் 2,3ன்படி அவர்களின் பெயர்கள் என்ன?

உங்கள் ஆஸ்திகளால் இயேசுவுக்கு ஊழியஞ்செய்ய நீங்கள் ஆயத்தமா?

“அவர்கள் கண்டும் காண்பதில்லை, கேட்டும் புரிந்துகொள்வதில்லை” ஏன்?

இன்று தேவ பிரசன்னத்தை உணரமுடியாதபடி எனது ஜீவியம் உள்ளதா?

உங்கள் இருதயத்தில் விழுந்த தேவ வசனம் நல்ல பலனை தருமா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin