? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 10:21-28

நித்தியமான வாழ்வு

…நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். லூக்கா 10:23

தேவனுடைய செய்தி:

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.

 தியானம்:

தங்களை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் வாழ்பவர்கள் அநேகர். ஆனால், இயேசுவோ, பிதா யார் என்பதை வெளிப்படுத்தவே செயற்பட்டார். பிதாவானவரை தமக்குச் சித்தமானவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

 விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நீ உன்னிடத்தில் அன்பாயிரு. உன் அயலவனிடத்திலும் அன்பாயிரு.

பிரயோகப்படுத்தல்:

நித்திய வாழ்வு பெற நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? “உன்னிடத்தில் அன்புகூருவது” எப்படி?

முன்மாதிரியான வாழ்க்கைக்கு அவசியமான நடத்தையைப் பிறரிடம் காட்டுவது எப்படி?

முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழுப் பலத்தோடும் முழுச் சிந்தையோடும் என்ன செய்யவேண்டும்? இது எப்படி சாத்தியம்?

நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்று நியாயசாஸ்திரியிடம் பதிலளித்த இயேசுவின் கூற்றை தியானிக்கும் நாம் மற்றவர்களோடு எவ்விதத்தில் நடந்துகொள்கிறோம்? பதிலளிக்கிறோம்?

தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் காண, கேட்க விரும்பியவை எவை? இன்று நான் யாரிடத்திலாகிலும் அன்புகூராமல் இருக்கின்றேனா?

? இன்றைய சிந்தனைக்கு:  

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin