📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 13:10-21
சிறியனவற்றிற்கும் ஆண்டவர்
அவள்மேல் தமது கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். லூக்கா 13:13
தேவனுடைய செய்தி:
தேவன் பெரிய காரியங்களைச் செய்பவர். அவர் சிறிய காரியங்களைக் கொண்டும் பெரிய காரியங்களைச் செய்கின்றவர்.
தியானம்:
பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து, உடல்நலம் குன்றி, சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்த பெண்ணை இயேசு விடுதலை பண்ணி சுகமாக்கினார். சுகம்பெற்ற அந்த ஸ்திரீ தேவனை மகிமைப்படுத்தினாள்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவனுடைய ராஜ்யத்திற்குரியவற்றையே நான் தேட வேண்டும்.
பிரயோகப்படுத்தல்:
- இயேசுவானவர் ஸ்திரீயை சுகமாக்கினார். அவளது நிலைமை முன்பு எப்படி இருந்தது? (வசனம் 11)
- இயேசு ஓய்வுநாளில் சுகமாக்கியது யாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது? ஏன்? அது நியாயமானதுதானா?
- வசனம் 15,16ன்படி, இயேசுவின் பதிலுக்கூடாக அவர் கூற வருவது என்ன? சாத்தானின் பிடியிலிருப்பவர்களை விடுதலையாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
- தனது வீட்டிலிருக்கும் மிருகத்தை ஓய்வுநாளில் காப்பாற்றுவது சரியா? மனிதர்கள் ஓய்வுநாளில் சுகம் பெறக்கூடாதா? மிருகங்களைவிட மனிதர்கள் விசேஷமானவர்கள் அல்லவா?
- விசுவாசம் மட்டுமே உங்களுக்குத் தேவை என்பதைக் குறித்து வசனம் 18, 19ல் நீங்கள் வாசிப்பது என்ன?
- பரலோக ராஜ்யம் எதற்கு ஒப்பிடப்படுகின்றது?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்
