? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:7

பிரசவகாலம்

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று,

முன்னணையிலே கிடத்தினாள்.

தேவனுடைய செய்தி:

வேதனை வேதனையாக இருக்காது, அதிலுள்ள நோக்கத்தை அறிந்தால்.

தியானம்:

தனது தகப்பனின் சொந்த ஊராகிய பெத்லகேமுக்கு, குடிமதிப்பை பதிவு செய்யும்படி யோசேப்பு, கர்ப்பவதியான மரியாளுடன் பயணம் செய்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நோக்கமற்ற வேதனை நம்மை பாரிசவாதத்திற்குட்படுத்தும். 

பிரயோகப்படுத்தல் :

  • வழமையாக ஆண்களே சொந்த ஊருக்குச் சென்று பதிவுசெய்ய வேண்டும். அப்படியாயின், மரியாள் சென்றது ஏன் என நினைக்கிறீர்கள்?
  • யோசேப்பும் மரியாளும் தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்தாலும், சரீர  ரீதியிலும் மனரீதியிலும் பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதுபோல்,  இப்பொழுது நீங்கள் முகங்கொடுக்கின்ற பாடுகள், வேதனைகள் எவை?
  • வசனம் 7ன்படி, குழந்தை பிறந்தபோது அவர்கள் முகங்கொடுத்த பிரச்சனை எதுவாக இருந்தது?

? எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *