குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 28 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  28:7-19

?  உன்னை வஞ்சிப்பவன் யார்?

கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன் ? 1சாமுவேல் 28:16

? தியான பின்னணி:

தேவன் தனக்கு பதில் கொடுக்காததால், கலங்கி திகைத்துப்போனான் சவுல். எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருப்பதை அறிந்து, இரகசியமாக அவளிடம் செல்கிறான். தான் யார் என்பதை மறைத்து பொய் கூறிய சவுலை, குறிசொல்லும் அவள் கண்டுபிடித்துவிடவே, எவ்வித ஆபத்தும் வராது என ஆணையிட்டாலும், அவனுக்கான முடிவு அங்கே கூறப்பட்டது. அது அவனது மரணமே.

? பிரயோகப்படுத்தல் :

❓ மரித்தவர்கள் மீண்டும் எழுந்துவந்து பேச முடியுமா? சாமுவேல் உயிரோடு இருக்கையில், அவரது வார்த்தைக்கு செவிசாய்க்காதவன், சொப்பனத்தில் மரித்தவரை எழுப்பி அவரிடத்தில் செய்தியை பெற முயற்சித்தது தகுமா?

❓ கர்த்தருடைய நாமத்தை பாவித்து, கர்த்தருக்கு விரோதமாக வாழ்ந்த சவுலைப்போல இன்றும் ‘தேவனை ஒரு பொருளாக பாவிக்கும்” மனிதர்களைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

❓ கர்த்தர் என்னோடு பேச வேண்டும் என்பதற்காக, தவறான வழிமுறைகளை பின்பற்றுகிற கிறிஸ்தவர்களை நீங்கள் அறிவீர்களா? குறிசொல்லும், வஞ்சிக்கிற ஊழியர்களை நாடி ஓடுகிறீர்களா? உன்னை வஞ்சிப்பவன் யார்?

❓ பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுவீர்களா?

? தேவனுடைய செய்தி:

▪️ உண்மையாக தேவனுக்கு கீழ்ப்படிகிறவர்கள் அவர் வெறுக்கிற வழிமுறைகளைப் பின்பற்றவோ அதில் தங்கியிருக்கவோ மாட்டார்கள்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தருடைய சத்தத்தை கேட்காதவர்கள், கேட்டும் உணராதவர்களின் நிலைமை பரிதாபகரமாகவே இருக்கும்.    

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whatsapp: +94768336006

Comments (135)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *