📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:5-13

தொடர்ந்து மன்றாடுதல்

கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.லூக்கா 11:10

தேவனுடைய செய்தி:

தேவன் நல்ல இராத்திரியில், வீட்டிற்கு வந்து உணவு கேட்கிறான். தொடர்ந்து அவன் கேட்டுக் கொண்டிருப்பதன் நிமித்தமாக அவன் எழுந்து தேவையானதைக் கொடுக்கின்றான். ஆம், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான். தேடுகின்றவன் கண்டு கொள்கின்றான். தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படுகிறது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டும் என்பதை அறிவீர்கள். பரம பிதாவும் தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயமான காரியம்!

 பிரயோகப்படுத்தல் :

பரமபிதாவிடம் நாம் வேண்டிக் கொள்ளுகிற காரியம் என்ன? ஏன் நாம் தேவனிடம் ஜெபிக்க வேண்டும்? நாம் எதை கேட்கிறோம்? எதை தட்டுகிறோம்? எதை தேடுகிறோம்? தேவனிடத்தில் என் விசுவாசம் எப்படிப்பட்டதாயிருக்கிறது? என்னிடம் உதவி கேட்பவர்களைக்குறித்த எனது மனப்பான்மை என்ன?

💫 இன்றைய சிந்தனைக்கு:

——————————————————————————————————————————————————————————————————————————————————————————————————–

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “11 டிசம்பர், 2021 சனி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin