? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:1-10

தயவு செய்

அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். லூக்கா 7:5

தேவனுடைய செய்தி:

வேறு எதன்மீதும் நம்பிக்கை வைக்காமல், இயேசுவையே பற்றிக்கொள்வோம்.

தியானம்:

நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவன், தனது ஜனத்தை நேசிக்கிறவனாக, ஒரு ஜெபஆலயத்தையும் கட்டியவனாக, தனது வேலைக்காரன் மீது மதிப்பும் பிரியமும் உள்ளவனாக இருக்கிறான். வேலைக்காரன் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருப்பதை இயேசுவிடம் கூறி சுகத்தை கட்டளையிடும்படி வேண்டிக் கொள்கின்றான். அவனது விசுவாசத்தைக் குறித்து இயேசு ஆச்சரியப்பட்டார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு என நூற்றுக்கதிபதி கூறியதுபோல, கிறிஸ்துவின் அதிகாரத்திற்கு முற்றிலும் என்னைக் கீழ்ப்படுத்தி ஒப்புவிக்க வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

ஒருவரிடம் “செல்க” என்றால், அவர் செல்கிறார், வேறு ஒருவரிடம் “வருக” என்றால் அவர் வருகிறார். வேலையாளிடம், “இதைச் செய்க” என்றால் அவர் செய்கிறார் என்றால், அந்த அதிகாரம் எப்படிப்பட்டது? இன்று அதை நான் எப்படி நல்ல விதத்தில் நடைமுறைப்படுத்தலாம்?

“ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” என நூற்றுக்கதிபதி இயேசுவிடம் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினான். அதைக்குறித்து இயேசுவின் பதில் என்ன?

“நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை” என்று சிந்திப்பதைக்குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? வார்த்தையின் அதிகாரத்தை நான் உணர்ந்திருக்கின்றேனா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin