குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 30 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல் 30:7-20

?  இழந்ததைத் திருப்பிக்கொள்!…அதைப் பின்தொடர். அதை நீ பிடித்து, சகலத்தையும்  திருப்பிக் கொள்வாய் என்றார்.1சாமுவேல் 30:8

? தியான பின்னணி:

அமலேக்கியர் சிறைபிடித்துச் சென்ற தன் மக்களை மீட்டுக்கொண்டு வரும் படிக்கு தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; சிலர் வழியிலே நின்றுவிட்டார்கள். இருநூறுபேர் விடாய்த்துப் போனபடியினால் கூடவரவில்லை. ஆனாலும் அவர்களைப் பின்தொடர்ந்த தாவீது சாயங்காலந் தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்து கொள்ளையிட்டான்.

? பிரயோகப்படுத்தல் :

❓ தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்.(1சாமு 30:19) இன்று நாம் இழந்த காரியங்கள் எவை?

❓ ஒரு அமலேக்கிய வேலைக்காரனாகிய எகிப்துதேச பிள்ளையாண்டான் மூன்று நாளைக்கு முன் வியாதிப்பட்டபோது, அவன் எஜமான் அவனைக் கைவிட்டதைக் குறித்து (வச 13) என்ன நினைக்கிறீர்கள்?

❓ நம்மை நம்பியவர்களை நாம் கைவிடுகிறோமா? அல்லது  உதவுகின்றோமா?

❓ நமக்கு உதவிசெய்கிறவர்கள், செய்கின்ற உதவியை நிறுத்திவிட்டால்,  அல்லது ஒரு ஆபத்துக்கு முகங்கொடுக்க நேரிடுகையில் உமது மனநிலை என்ன?

? தேவனுடைய செய்தி:

▪️ சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க நாம் முயற்சி செய்யவேண்டும்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

1. பின்தொடர்,
2.நீ அதைப் பிடி,
3. சகலத்தையும் திருப்பிக்கொள்
என்ற மூன்று பகுதிகளை வேதாகமத்தில் காண்கிற நாம், எல்லாவற்றிலும் தேவனை சார்ந்திருப்போமாக.    

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whatsapp: +94768336006

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *