? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 18:12-16

குணமடைந்த நோயாளி

ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான். லூக்கா 5:12

தேவனுடைய செய்தி:

தம்மிடத்தில் வேண்டிக்கொள்கின்ற யாவரைறும் இயேசு குணமாக்குகிறார்.

தியானம்:

தொழுநோய் பீடித்திருந்த மனிதன் இயேசுவிடம் வந்து தன்னைக் குணப் படுத்தும்படி மன்றாடுகிறான். இயேசு, ‘நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். உடனே தொழுநோய் அவனை விட்டு மறைந்தது. குஷ்டரோகி சுகமானதைக் கண்ட திரளான ஜனங்கள் இயேசுவின் உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு! என்றார் இயேசு.

பிரயோகப்படுத்தல் :

குஷ்டரோகம் அதாவது தொழுநோய் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?அது எப்படிப்பட்டது? இன்றைய கொரோனா தொற்றுநோய் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? யார் அதைக் குணமாக்க முடியும்?

குஷ்டரோகி இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்தது ஏன்?

‘உன்னை ஆசாரியனுக்குச் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், சாட்சியாகப் பலிசெலுத்து” என இயேசு குஷ்டரோகியிடம் கூறியது ஏன்? நாம் தேவன் செய்த நன்மைகளை சாட்சியாக கூறுகின்றோமா?

குஷ்டரோகி இயேசுவிடம் வேண்டிக்கொண்டபடி (5:12) நாம் தேவனிடம் மன்றாடுகின்றோமா? எமது பிரச்சனை என்ன? அவர் சமுகத்தில் முன் வைத்து தாழவிழுந்து மன்றாடுவேனா?

வசனம் 16ன்படி, இயேசு முன்மாதிரியாக செய்த காரியம் என்ன?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Comments (1,685)