குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:4-17

?  ஏன் இந்தக் கோபம்!

அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான். 1சாமுவேல் 25:14

? தியான பின்னணி:

வனாந்திரத்தில் நாபாலின் மேய்ப்பர்களுக்கு செய்த உபகாரத்திற்காக நன்றியை எதிர்பார்த்த தாவீதுக்கு நாபால் அளித்த புத்தியற்ற பதில் அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

? பிரயோகப்படுத்தல் :

❓ மற்ற மனிதரைக் குறித்த கோபம் என்னிடமுண்டா?

❓ தேவ மனிதர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்ற விருப்பம் என்னிடமுண்டா?  கர்த்தாpடத்தில் என் காரியங்களை விசாரித்து அறிகின்றேனா?

❓ தேவனை அறியாத நாபாலைப்போல நன்மை செய்யாதவனாகவும்,  தேவனை அறிந்த தாவீதைப்போல கோபம் கொள்பவனாகவும் நான் நடக்கின்றேனா? நான் என்னை சரிசெய்துகொள்வது எப்படி?

❓ ‘அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்” என்று மேய்ப்பர்கள் தாவீதைக் குறித்து சாட்சி பகிர்ந்தனர். நம்மைக் குறித்து பிறாpன் சாட்சி எப்படிப்பட்டதாயிருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

❓ தாவீது பட்டயத்தை எடுக்காமல், முன்பே நாபாலை மன்னிக்க முடிவு எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்!

❓ நீ எதை செய்தாலும் ‘தேவனோடு ஆரம்பி” அத்துடன் ‘தேவனோடு நிலைத்திரு, தேவனோடு முடிவு செய்!”

? தேவனுடைய செய்தி:

▪️ நமக்கு கோபத்தை வர வைத்த அந்த சம்பவத்தைவிட நம்முடைய கோபம் நம்மை கடுமையாக பாதிக்கும். ஆகவே கோபத்தை நாம் கட்டுப்படுத்தி எம்மை ஆளுகை செய்ய வேண்டும்.

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? இன்றைய விண்ணப்பம்

உலகெங்குமுள்ள திருச்சபைக்காக ஜெபியுங்கள், எமது பழக்கமான பாதுகாப்பு நிலையிலிருந்தும் குடும்ப நடைமுறைகளிலிருந்தும் வெளியே தள்ளப்படும் நாம், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ளவும், இச் சூழ்நிலையின் மத்தியில் உண்மையும் பெலனுமுள்ள சீடர்களாக சுவிசேஷகர்களாக திகழ மன்றாடுங்கள்.

? அனுதினமும் தேவனுடன்.

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin