? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:21-26

?♀️  உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்

நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன். … அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்… 1இராஜா.18:24

ஒரு பத்திரிகை கேலிச்சித்திரம் இப்படி இருந்தது. ஒரு சிறுவன் தனது படுக்கையின் அருகில் முழங்காற்படியிட்டு, ‘ஜிம் மாமாவுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, எனது சகோதரியின் விருப்பம் இன்னமும் நடக்கவில்லை. எனது பாட்டியின் உடல் நிலை இன்னும் மோசமாகவே இருக்கிறது. இவர்களுக்காக நான் ஜெபம்செய்து சோர்ந்துபோய்விட்டேன்” என்று சலிப்புடன் ஜெபிக்கிறான். கடவுள் நமது ஜெபங்களுக்குப் பதில் தரவில்லையென்றால், அது மனச்சோர்வை ஏற்படுத்துவதில் வியப்பில்லை.

ஆனால், எலியாவுக்கோ சந்தேகங்கள் ஏதும் இல்லை. கடவுள் உண்மையான கடவுளாயிருந்தால், ஜெபம் உடனே கேட்கப்படும். அவனது நம்பிக்கைக்குப் பலன் கிடைத்தது. கடவுள் அவனுடைய ஜெபத்தைக் கேட்டுப் பதிலளித்தது மட்டுமல்லாமல், அதைக் கண்ட மக்கள் ‘உண்மையான கடவுள் யார்?” என்று கேள்விகேட்க முடியாதபடி செய்துவிட்டார். சாதாரணமாக தீப்பிடித்து எரியாத பொருட்கள்கூட, தேவன் அக்கினியை அனுப்பியவுடன் பலிபீட தண்ணீரில் நனைந்த இறைச்சி, விறகு கற்கள், மண், தண்ணீர் அனைத்தையும் உறிஞ்சி நக்கிபோட்டது (வச.38). எலியாவின் ஜெபம் கேட்கப்பட்டு, வானத்திலிருந்து அக்கினி அனுப்பப்பட்டுப் பலியைப் பட்சித்துப்போட்டது.

கிறிஸ்தவ விசுவாசத்தின் சிறப்புத் தன்மையானது, நமக்கு ஒரு ஜீவிக்கும் கடவுள் இருக்கிறார் என்பதேயாகும். அவர் நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார்.அவரது செவிகளும், இருதயமும் நமது குரலைக் கேட்க ஆயத்தமாக உள்ளன. நமது விண்ணப்பங்களை, விருப்பங்களை நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் தராவிட்டாலும், அது வரும். நாம் எதிர்பார்க்கும் விதத்தில் அவர் தருவதில்லை. ஆனால் நமக்கு மிக அதிக நன்மையைத் தரும் விதத்தில் அருளிச்செய்வார்.

ஜெபத்துக்குச் சரியான பதிலை, நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் கர்த்தர் தருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆண்டவர் நமக்குத் தரும் ஆசீர்வாதங்கள் மிகச் சிறந்தவையே. நமது முழு நம்பிக்கையானது: நாம் தேவனுடைய சித்தத்தின்படி விண்ணப்பம் செய்தால், எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்றும், நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்று அறிந்திருக்கிறோம் (1யோவான் 5:15). உங்கள் ஜெப நேரத்தில் சோர்ந்து போகாதிருங்கள். தேவனுடைய சித்தம் என்னவென்று அறிய முயற்சியுங்கள். அதன் பின்னர் முழு விசுவாசத்துடன் ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்யுங்கள். ஜெபத்தைக் கேட்கிற தேவன் சரியான நேரத்தில் சரியான முறையில் கிருபையாய்ப் பதிலளிப்பார்.

? இன்றைய சிந்தனை :

ஜெபிப்பது நமது பொறுப்பு; அதற்குப் பதிலளிப்பது ஆண்டவருடைய பொறுப்பு.

? இன்றைய விண்ணப்பம்

கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பதற்கும் தியானிப்பதற்கும் விசுவாசிகள் போதுமானளவு நேரத்தை கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டுமென மன்றாடுங்கள். அவர்கள் தமது சிந்தனையை குணாதிசயத்தை வடிவமைப்பதிலும், உறுதியான சீடர்களாக மாறிடுவதிலும், விசுவாசத்தில் மற்றவர்களை ஊக்குவிக்கக்கூடியவர்களாக திகழ்ந்திடவும் மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin