? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:6-9

?♀️  ஆறு வற்றியபோது…

தேசத்தில் மழை பெய்யாதபடியினால் சில நாட்களுக்குப் பின் அந்த ஆறு வற்றிப்போயிற்று. 1இராஜாக்கள் 17:7

மார்ட்டின் லூத்தரின் நண்பனான ஜான் பிரென்ஸை கொலைசெய்ய முயற்சித்தார் சக்கரவர்த்தி நான்காம் சார்ல்ஸ். ஒருதடவை அவரைக் கைதுசெய்ய போலீஸ் பிரிவை அனுப்பிவைத்தார். இதைக் கேள்விப்பட்ட பிரென்ஸ் ஒரு பெரிய ரொட்டியை  எடுத்துக்கொண்டு பக்கத்துக் கிராமத்திற்கு மறைவாகச் சென்று, ஒரு வைக்கோற் போரினுள் ஒளித்துகொண்டார். அந்த ரொட்டி இரண்டு வாரங்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை; அது தீர்ந்துபோனது. அப்பொழுது ஒரு அதிசயம் நடந்தது. ஒரு கோழி பிரென்ஸ் மறைந்திருந்த வைக்கோற்போரினுள் வந்து ஒரு முட்டையைப் போட்டுவிட்டுப்போனது. பிரென்ஸ் அந்த முட்டையை எடுத்துச் சாப்பிடுவார். இப்படியே 14 நாட்கள் கோழி இட்ட முட்டையைச் சாப்பிட்டு உயிர் பிழைத்திருந்தார். ஆனால் 15ம் நாள் அந்தக் கோழி வரவில்லை. அன்று அவருக்கு உணவு கிடைக்கவில்லை. தன்னுடைய உணவுக்கு ஆதாரமாயிருந்த அந்த உணவுப் பாதையும் இப்பொழுது துண்டிக்கப்பட்டுவிட்டதே என்று கவலைப்பட்டார். அந்நேரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த மக்கள், ‘சில நாட்களாகவே யாரையோ பிடிப்பதற்கு நமது கிராமத்தில் கூடாரம் போட்டுத் தங்கியிருந்த போர்வீரர்கள் கூட்டம் கடைசியில் புறப்பட்டுப் போய்விட்டது” என்று பேசிக்கொண்டு சென்றார்கள். இதைக்கேட்ட ஜான் பிரென்ஸ் தனது சிறையிருப்பு முடிந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டார்.

எலியாவும் இதுபோன்ற ஒரு அனுபவத்தைச் சந்தித்தான். வனாந்திரத்தில் தேவன் அவனுக்கென்று அப்பமும், இறைச்சியும், தண்ணீரும், பாதுகாப்பான மறைவிடமும் தந்திருந்தார். ஆனால் அந்த நெருக்கடி நிலை இன்னும் மோசமடைந்தது. தேசத்தில் மழை இல்லததால் நிலம் வறண்டு, எலியாவுக்குத் தண்ணீர் கொடுத்த நீரோடையும் வற்றிவிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால், தேவன் தமது தீர்க்கத்தரிசியைக் காப்பாற்ற தவறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், தேவன் அவனை வித்தியாசமான இன்னொரு விதத்தில் போஷித்துப் பாதுகாக்க திட்டமிட்டிருந்தார். தேவன் எலியாவைச் சாரிபாத் என்னும் ஊரிலுள்ள ஒரு விதவையிடம் போய் இருக்கச் சொன்னார். அங்கேயும் தேவன் அற்புதம் செய்தார்; பாத்திரத்தில் மாவும், குடத்தில் எண்ணெயும் குறைவுபடாதபடி செய்து, விதவையும், மகனும், தீர்க்கதரிசியும் பஞ்சகாலம் முடியும்வரை புசிக்கச் செய்தார் கர்த்தர். சூழ்நிலை எப்படி இருந்தாலும் ஆண்டவரை நம்புங்கள். அவரால் மட்டுமே உங்களுக்கு உதவிசெய்ய முடியும். ஒரு புதிய நபர் மூலமாகவும்கூட உதவிகள் கிடைக்கச்செய்ய ஆண்டவரால் முடியும். ஆகவே, எந்தவகையிலும் தேவன் உங்களைக் கைவிடமாட்டார் என்று நம்புங்கள். அவரை விசுவாசிக்கிற ஜனங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.

? இன்றைய சிந்தனை :

உங்களுக்கு உதவிகள் வரும் ஒரு வாசல் அடைக்கப்படும்போது, உங்களுக்கு உதவ ஜன்னல்கள் திறக்கும்.

? இன்றைய விண்ணப்பம்

பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பாக உள்ள விண்ணப்பங்களை கவனமாக ஆராய ஜெபியுங்கள். இலங்கை அரசியலமைப்பிற்கும் தங்களின் உறுதிமொழிக்கும் அவர்கள் உண்மையாக இருக்கும்படிக்கு, அவர்களுக்கு தெளிந்த சிந்தனையையும் தைரியத்தையும் கர்த்தர்தாமே கொடுத்து அவர்கள் நியாயமானதும் துல்லியமானதுமான தீர்ப்பை வழங்கும்படிக்கு மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin