? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 36:15-26

? கர்த்தரையே நோக்குவோமாக!

…ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.
எரேமியா 36:26

யூதா மற்றும் இஸ்ரவேலைக் குறித்து இதுவரை சொன்ன யாவற்றையும் ஒரு புத்தகச் சுருளிலே எழுதும்படி தேவன் எரேமியாவைப் பணித்தார். இதை வாசித்தாவது அவர்கள் மனந்திரும்ப மாட்டார்களா என்பது தேவனுடைய ஏக்கம். அப்படியே எரேமியா பாரூக்கை அழைப்பித்து எழுதிய அந்த தோல்சுருளை எடுத்துக்கொண்டு கர்த்தரின் ஆலயத்துக்குள் பிரவேசித்து உபவாச நாளிலே வாசிக்கும்படி சொன்னார். பாரூக்கும் அப்படியே செய்தான். கடைசியில் ராஜாவுக்கு முன்பாக அந்தச் சுருள் வாசிக்கப்பட்டபோது நடந்தது என்ன? ராஜாவாயினும், அந்த வார்த்தைகளைக் கேட்ட மற்றவர்களாயினும் அதற்குப் பயப்படவில்லை. மாறாக, ராஜா கோபம்கொண்டு அந்தச் சுருளை நெருப்பிலே போட்டு எரித்தான். இதனால் ராஜாவுக்கு ஏதாவது தீங்கு நேரிட்டதா? இல்லை. தீங்கு நேரிட்டது யாருக்கு? எரேமியா பாரூக் இருவருக்கும்தான். இது நியாயமா?


‘துன்மார்க்கரின் வாழ்வை நான் கண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண் இல்லை. அவர்கள் விரும்புவதிலும் அதிகமாக நடந்தேறுகிறது” என்றும், ‘சுகமாய் இருந்து ஆஸ்திகளைப் பெருக்குகிறார்கள்” என்றும் ஆசாப் தன் புலம்பலை 73ம் சங்கீதத்தில் கொட்டியிருக்கின்றார். இன்றும் நம்மைச் சுற்றிலும் வாழுகின்ற தேவ பயமற்ற மக்களுடைய செழிப்பான வாழ்வு நம்மையும் இப்படியான மனநிலைக்குள் தள்ளிவிடுகிறது. ஆனால் ஆசாப் இறுதியில், ‘நான் தேவனுடைய பாpசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, அவா;கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப் போகிறார்கள்” (சங்.73:16-19) என்று பாடுகிறார். தேவன் அநீதியுள்ளவரல்லவே!


எரேமியாவைத் தேவன் கைவிட்டாரா? இல்லை. கர்த்தர் அவரை மறைத்து வைத்தார்.எந்த அநீதி ஆபத்தை சந்தித்தாலும், நாம் தேவனற்றவர்களின் செழிப்புக்களைக் காண்பதைத் தவிர்த்து, தேவனிடம் திரும்பி, அவரையே நம்பிக்கையாகப் பற்றிக் கொண்டால், அவர் நிச்சயமாகவே நம்மைச் சத்துருவுக்கு மறைத்துக் காப்பார். அரசனே எரேமியாவுக்கு எதிரியான போதிலும், எரேமியா, தேவனையே நம்பினார். அந்த நம்பிக்கை நம்மிடம் உண்டா? காற்றிலே பறப்பது கோதுமை மணி அல்ல; பதர்தான் பறக்கும். நாம் பதராக இராமல் கோதுமை மணியாக அவரது பாதத்திலிருப்பதே சிறப்பானது. களத்தில் கோதுமை மணியைத் தூற்றுவது அதற்காகத்தான். நாம் தேவ பாதத்திலே எப்போதுமிருப்பதும் அவரது சமுகத்தை நாடுவதுமே மேலான காரியமாகும். நாம் எப்பொழுதும் நம் கண்களை தேவனை நோக்கியே வைத்திருப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

செழிப்படைகின்ற பிறரையோ, பிரச்சனைகளையோ பார்த்துக் குழம்பாமல், தேவனை நோக்கி அமர்ந்திருக்கக் கற்றுக்கொள்வோமாக.

? இன்றைய விண்ணப்பம்

மிக பயனுள்ள வழிமுறையில் புதிய யதார்த்தத்தின் வெளிச்சத்தில், முன்னோக்கி நகர்ந்திட முயலுகின்ற ஊழியர்களுக்கான தலைமைத்துவத்தை தொடர்ந்து வழங்கும் எமது நிர்வாக இயக்குநருக்காக ஜெபியுங்கள்.இக்காலக்கட்டத்தில் கர்த்தர் அவரைப் பெலப்படுத்தவும் பராமரிக்கவும் மன்றாடுங்கள். மேலும் அவரது மனைவி, அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக வீடு திரும்ப முடிந்தமைக்காக கர்த்தரைத் துதியுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin