? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:28-35

திறக்கப்பட்ட கண்கள்

அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். லூக்கா 24:30

தேவனுடைய செய்தி:

எம்மாவூர் சென்ற சீடர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் இயேசு யார் என்பதை அறிந்துகொண்டார்கள். 

தியானம்:

“எங்களுடன் தங்குங்கள். மிகவும் தாமதமாகிவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது” என்று கெஞ்சிக் கேட்டதின் காரணமாக, இயேசு அவர்களோடு சேர்ந்து உணவுண்ண உட்கார்ந்திருந்தார். அவர் யார் என அவர்கள் உணர்ந்துகொண்டதும், அவர் மறைந்துவிட்டார். பதினொரு சீஷர்களும் அவர்களோடிருந்த மக்களும் “மரணத்தினின்று உண்மையாகவே அவர் மீண்டும் எழுந்தார்” சீமோனுக்கு அவர் காட்சியளித்தார் என்றார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீடர்களுக்குத் தரிசனமானார்.

பிரயோகப்படுத்தல் :

எம்மாவூரில், சீடர்கள் இயேசுவை, உணவருந்த வருந்திக் கேட்டுக்கொண்டதேன்? இயேசு என்ன செய்து காண்பித்தார்?

அன்று இயேசு, அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்த போது சீடர்கள் இயேசுவை அறிந்துகொண்டனர். இன்று நமது திருவிருந்தில் இவ்விதமாய் இயேசுவை அறிந்துகொள்ள அதை நினைவு கூருகின்றோமா?

இயேசு வேதவாக்கியங்களை விளங்கக்காட்டினபொழுது சீடரின் இருதயம் உணர்ந்தது என்ன? இன்று நாம் மக்கள் உணரும்படி எதை புரியவைக்க வேண்டும்?

மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவரைக் கண்டபோது சீடர்களின் நடவடிக்கை எப்படியிருந்தது? அதை எப்படி அவர்கள் ஜீரணித்தார்கள்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்

Solverwp- WordPress Theme and Plugin