? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:36-43

சமாதானம் உண்டாவதாக!

நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? லூக்கா 24:38

தேவனுடைய செய்தி:

நான்தான் என்று அறியும்படி, என்கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள் – இயேசு

தியானம்:

சீடர்களின் நடுவே, இயேசு, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார். பயந்து கலக்கமுற்ற சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். சீடர்கள் தாம் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார்.

பிரயோகப்படுத்தல் :

இயேசு சீடர்களின் நடுவே தோன்றி, வாழ்த்து கூறியபோது, அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தனர். இன்று இயேசு நமக்கு காட்சியளித்தால், அதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?

ஏன் வீண் கலக்கம்? ஏன் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகின்றன?

இயேசுவை தொட்டுப்பார்க்க சீடர்களுக்கு அன்று சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று நாம் எவ்விதமாக இயேசுவை உணரலாம்?

இயேசு தமது கைகளையும் கால்களையும் காண்பித்தது ஏன்?

வசனம் 41ன்படி, சந்தோஷத்திற்கும் விசுவாசிப்பதற்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன? இயேசுவைக் கண்டு சந்தோஷப்படும் அதேநேரம் அவரை விசுவாசிக்க முடியாமல் தடுப்பது எவை?

இயேசுவைக்குறித்த விசேஷங்களை எங்கே நாம் வாசிக்கிறோம்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin