? சத்தியவசனம் – இலங்கை. ?

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :லூக்கா 23:1-5

பிலாத்துவின் கேள்வி

பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். லூக்கா 23:3

தேவனுடைய செய்தி:

குற்றஞ்சாட்டுவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

தியானம் : 

இராயனுக்கு வரி கொடுக்கக் கூடாதென்று இயேசு கூறியதில்லை. எனினும், ஒரு பொய்க் குற்றச்சாட்டினை இன்னொரு பொது குற்றச்சாட்டுடன் இணைத்துசோடித்து பிலாத்துவிடம் மக்கள் கூட்டத்தினர் இயேசுவைக் குறித்து குற்றம் சாட்டுகின்றனர். “அவன் தன்னைக் கிறிஸ்துவாகிய அரசர் என்று அழைக்கிறான்” என்றனர். அத்துடன் “அவன் கலிலேயாவில் ஆரம்பித்து இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

யூதருக்கும் யூதரல்லாதோருக்கும் இயேசுவே ராஜாதி ராஜாவாக இருக்கிறார்.

பிரயோகப்படுத்தல் :

அரசாங்கத்திற்கு வரிகொடுக்க வேண்டுவதில்லை என்று யாரேனும் கூறினால் அதற்கு உமது பதில் என்ன? ஏன் நாம் வரிசெலுத்த வேண்டும்? 

இயேசு வரி செலுத்திய சம்பவம் நினைவில் உண்டா? (மத் 17:25-27)

பிலாத்துவின் அவதானிப்பு: “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” நான் இயேசுவை எவ்வாறு காண்கிறேன்?

பிறரைக் குற்றம்சாட்டுவோரைக் குறித்து நமது மனப்பான்மை என்ன?

உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக (லூக் 17:3) யாரைக் குறித்து நான் எச்சரிக்கையுடன் இருக்கின்றேன்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin