? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :லூக்கா 19:1-10

வரி வசூலிப்பவன்

சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.லூக்கா 19:5

தேவனுடைய செய்தி:

மனுஷகுமாரன் மனிதர்களை மீட்கவே வந்தார்.

தியானம்:

இயேசுவைக் காண விரும்பியவர்கள் பலர். செல்வந்தனும் வசூலிப்பவனுமான சகேயு இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது ஏறினான். இயேசு அவனைக் கண்டார். அவன் வீட்டில் தங்கும்படி சென்றார். அவன் வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தர் எமது வீட்டில் தங்க விரும்புகின்றவர். 

பிரயோகப்படுத்தல் :

வரிசுமையினால் நாட்டு மக்களைப் பிழிந்தெடுப்பவர்களைக் குறித்த உங்களது மனப்பான்மை என்ன?

நீங்கள் யாரையாவது வெறுக்கின்றீர்களா? வெறுப்பதற்கான காரணம் என்ன? அந்த வெறுப்பை நீக்க என்ன செய்யப்போகின்றீர்கள்?

“இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார்” என்று இயேசுவைக் குறித்து முறுமுறுத்தவர்களின் நிலைப்பாடு என்ன? இன்றும் இப்படிப்பட்டவர்களைக் காண்பதுண்டா?

வசனம் 8ன்படி, தனது ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன் என்ற சகேயுவின் உள்ளம் அவனுக்குள் எப்படி வந்தது?

நான் யார் பணத்தையாவது ஏமாற்றி இருந்தால், நான்கு மடங்கு திரும்பக் கொடுப்பேன் என்ற தீர்மானத்தை எடுத்த யாரையாவது கண்டதுண்டா? நீங்கள் மனந்திரும்புதலை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?

வசனம் 9ன்படி, சகேயு அவனது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டான். அவனது வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்பதன் அர்த்தம் என்ன?

?  இன்றைய சிந்தனைக்கு:

Solverwp- WordPress Theme and Plugin