? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 19:28-48

எருசலேமும் தேவாலயமும்

என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது லூக்கா 19:46

தேவனுடைய செய்தி:

இயேசுவுக்கு செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருப்பதே நலம்.

தியானம்:

ஊருக்குள் சென்ற இரண்டு சீஷர்கள், இயேசு கூறியபடியே கழுதைக்குட்டியைக் கண்டார்கள். “ஆண்டவருக்குத் இக்கழுதை தேவை” என்று பதில் அளித்தார்கள். இயேசுவைக் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். இயேசு எருசலேமைப் பார்த்துப் பேசினார். பின்பு தேவாலயத்திற்குள் சென்றார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!

பிரயோகப்படுத்தல் :

சீடர்கள் எதை ஆண்டவருக்காக கொண்டுவரும்படி போனார்கள்?

வசனம் 35-40 ன்படி இயேசுவைக் குறித்து கூறப்பட்டது என்ன? அதைக் குறித்து எரிச்சலடைந்தவர்கள் யார்? தேவனைப் புகழ்ந்தவர்கள் யார்?

இயேசு எந்த நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுதார்? ஏன்?

தேவாலயத்தில் இயேசு கண்டது என்ன? இன்று நாம் ஆண்டவருக்காக கொடுப்பது எப்படிப்பட்டது?

வசனம் 46ன்படி, திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக தேவாலயத்தை மாற்றியவர்கள் யார்? உண்மையில் தேவாலயம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

“அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார்.” இன்று எமது இருதயம் எங்கே உள்ளது?

எனது சிந்தனை:

Solverwp- WordPress Theme and Plugin