குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 26 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  26:5-12

?  நல்ல ஆலோசனை

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். நீதிமொழிகள் 2:11 

? தியான பின்னணி:

சவுலைக் கொலை செய்ய தாவீது அனுமதிக்கவில்லை. தீமை செய்யாதபடி கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என தாவீது கூறுகிறான். அவனை கொலை செய்ய வந்த சவுலைக்கூட கொல்லாமல் தப்புவித்தான்.

? பிரயோகப்படுத்தல் :

❓ தாவீதுக்கு தெரியும், தேவன் சவுலை அழிக்க அவனுக்கு கூறவில்லை. தேவன் சவுலை அப்புறப்படுத்துவார் என்பது அவனது எதிர்பார்ப்பு. இன்று பதவிக்கு வருவதற்கு பிழையான முறைகளை, வழிகளைக் கையாளும் நபர்களைப் பார்த்திருக்கின்றீர்களா?

❓ வசனம் 9 ஐ எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள்? இன்று இதை எப்படி வியாக்கியானம் பண்ணுகிறார்கள்?

❓ கர்த்தருடைய நாமத்தைப் பாவித்து, ‘பிழையான விதத்தில் தேவ வார்த்தைக்கு விரோதமாக நடக்க ஊக்குவிப்பவர்களைக் குறித்த” உங்கள் பார்வை என்ன?

❓ பிழையான விதத்தில் ஒருவர் உங்களை வழிநடத்த முற்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

? தேவனுடைய செய்தி:

▪️ தீமை செய்யாதே. குறிப்பாக, தேவனுடைய மனிதனாக நடந்துகொள்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்?  

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin