குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 26 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  26:5-9

?  ஆலோசனை

என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கி வருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடே கூட வருகிறேன் என்றான்.1சாமுவேல் 26:6

? தியான பின்னணி:

சவுலும் படைத்தளபதியான அப்னேரும் 3000 போர் வீரர்களுடன் தாவீதை அழிக்க பாளயமிறங்கி தங்கியிருக்கையில், தேவன் அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார். ‘தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்” என அபிசாய் கூறி, சவுலைக் கொலை செய்யவா என தாவீதிடம் கேட்க, அவன் அனுமதி கொடுக்கவில்லை..

? பிரயோகப்படுத்தல் :

❓ கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நபர்களின் பாவங்களை, தவறுகளைக் குறித்து நாம் சிந்திப்பது என்ன? அவற்றைக் கையாள்வது எவ்வாறு? 

❓ அபிஷேகம் செய்யப்பட்டவர், நியமிக்கப்பட்டவர் என ஒருவரின் பாவங்களை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் எனவா வேதாகமம் கூறுகிறது?

❓ பாவம் செய்பவர்கள், தவறு செய்யும் நாட்டின் அதிபதிகள், அதிகாரிகள், இவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டுவது தவறா?         

❓ கடந்தகாலத்தில் நீங்கள் (வட்சப், பேஸ்புக் ஊடாக) கேட்ட செய்திகள், மெய்யாக ‘தேவ வார்த்தையின் அடிப்படையிலானதா” என ஆராய்ந்து பார்த்தீர்களா?

? தேவனுடைய செய்தி:

▪️ தேவனது நாமத்தை உச்சரித்து கூறும் ஆலோசனைகள் எல்லாம் தேவனிடமிருந்து வருகின்றதா?

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் எந்த சூழ்நிலையிலும் நம்மைக் கவனிக்கிறார்.  

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin