குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:18-25

?  பொறுப்பேற்றல்

அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்… 1சாமுவேல் 25:24

? தியான பின்னணி:

நாபாலின் மேய்ப்பர்களுக்கு தாவீது நன்மை செய்தான். எனினும் நாபால் அளித்த புத்தியற்ற பதிலினால் தாவீது கோபம் கொண்டான். நாபாலின் நடத்தையால் ஆபத்து வர இருந்ததை தெரிந்துகொண்ட அவனது வேலைக்காரர்கள் அபிகாயிலை அணுகுகின்றனர்.

? பிரயோகப்படுத்தல் :

❓ மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது இலகுவான காரியமாக எண்ணுகிறேனா? பழியை யார் ஏற்பது என்பது முக்கியம் அல்ல, சண்டையை யார் நிறுத்துவது என்பதுதான் முக்கியம்.

❓ இன்று நான் அபிகாயிலின் இடத்தில் இருந்தால், நாபாலுடைய குற்றத்தின் பழியை என் தலையில் ஏற்றுக்கொண்டிருப்பேனா?

❓ ஒருவேளை பொல்லாத கணவனோடு வாழும் வாழ்க்கை, கெட்ட வார்த்தைகளால் திட்டும் மாமியார், மருமகள் குடிகாரத் தகப்பன் போன்ற முட்கள் நிறைந்த வாழ்வு வாழ்பவர்களுக்காக இன்று நான் என்ன செய்கிறேன்?

❓ ‘என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்” என அபிகாயில் ஏன் தாவீதிடம் கூறினாள் என சிந்திப்பீர;களா?

❓ கொடிய சூழலை அநேகருக்கு ஆறுதலளிக்கும் இடமாக மாற்றிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

? தேவனுடைய செய்தி:

▪️ நமது தவறுக்கான பொறுப்பினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறரது தவறுக்கான பொறுப்பையும் ஏற்று அதை சரிசெய்திட முற்படவேண்டும்.

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? இன்றைய விண்ணப்பம்

எமது நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மருத்துவ வல்லுநர்களுக்காக தேவனை துதியுங்கள். இந்த வைரஸை எதிர்த்து போராடுவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும், அயராது உழைக்கும் அவர்களின் சேவைக்கு உரிய ஞானத்தையும், பொறுமையையும், பெலனையும் கொடுக்கும்படி மன்றாடுங்கள்.

? அனுதினமும் தேவனுடன்.


எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin