? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:31-43

உன் பார்வையை மீண்டும் பெறு

இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக்கா 18:42

தேவனுடைய செய்தி:

தாவீதின் குமாரனாகிய இயேசு நம்மீது இரக்கமுடையவர்.

தியானம்: 

நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்  என்று கேள்விப்பட்டவுடனே, குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின்  குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான். “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்று இயேசு கூறியபோது, அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: 

பார்வையடைந்த குருடன், தேவனை மகிமைப்படுத்தினான். 

பிரயோகப்படுத்தல் :

வசனம் 31-33ல், மனுஷ குமாரனைக் குறித்து இயேசு கூறுகின்ற  எதிர்மறையான வார்த்தைகள் எப்படிப்பட்டவை? 

இயேசு மரணத்தினின்று எழுவார் என்ற சத்தியத்தை சீஷர்களால் புரிந்து கொள்ளக்கூடாமல் இருந்தது ஏன்? 

மக்கள் பிச்சைக்காரனான குருடனை அதட்டியது ஏன்? அதற்கு குருடனின் பிரதியுத்தரம் என்ன? 

இயேசுவிடம் அழைத்துவரப்பட்ட குருடன் விரும்பியது என்ன? அதை  இயேசு நிறைவேற்றினாரா? இன்று என் விருப்பம் என்ன? அது எப்படிப்பட்டது? 

பிறருடைய வாழ்வில் இயேசு செய்த அற்புதத்தைக் கண்டு நான் இன்று  தேவனைப் புகழ்ந்து ஸ்தோத்தரிக்கின்றேனா?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin