குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:32-38

?  உன்னைக் காப்பாற்றும் நல்யோசனை!

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.  நீதிமொழிகள் 2:11

? தியான பின்னணி:

நாபால் குடித்து வெறித்திருந்தான்.  பழிவாங்கும் வெறியோடு வந்த தாவீதும், அவனது 400 ஊழியரிடமும், ‘பழிவாங்குவது கர்த்தருடைய வேலை, உன்னுடையது அல்ல’ என்று அபிகாயில் ஞாபகப்படுத்தினாள். தீமையை தவிர்த்தாள். மதுபானத்தை அதிகமாக அருந்திய நாபாலிடம், இரவு எந்தக் காரியத்தையும் சொல்லாத அபிகாயில் மறுநாள் காலையில், எல்லாவற்றையும் நாபாலுக்கு அறிவித்தாள்.

? பிரயோகப்படுத்தல் :

❓ அபிகாயில் அன்றாட வாழ்வில் எதை எதை செய்யவேண்டும், எதற்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்று அறிந்து தீவிரித்து செயல்பட்டாள். இன்று நான் நன்மைக்கேதுவான காரியங்களை விரைந்து முடிக்கிறேனா?

❓ எத்தனையோமுறை நாம் பேசிவிட்டு பின்னர் யோசிக்கிறோம். நாம் எதையும் பேசும்போது அடுக்குமொழி அவசியமில்லை! நல்யோசனை அவசியம்! அது என்னிடமுண்டா?

❓ நான் பிறருக்கு கொடுக்கும் ஆலோசனை எப்படிப்பட்டது? மட்டம்தட்டாது, கடின வார்த்தைகளை உபயோகிக்காது ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களை நான் ஆலோசனையாக கூறுகிறேனா!

❓ எனது அன்றாட வாழ்க்கையில் நான் பேசும் வார்த்தைகள் யாருக்காவது ஆசீர்வாதமாக உள்ளதா?

? தேவனுடைய செய்தி:

▪️ இந்த உலகத்தில் நல்ல ஆலோசனையைவிட உயர்ந்த பரிசை யாருமே கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசை வேதாகமத்தில் பெற்ற நாம் அதை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்!

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? இன்றைய விண்ணப்பம்

கடினமான பகுதிகளில் விசுவாசிகளை சீடத்துவத்தில் வழிநடத்தும் போதகர்மாரை ஊக்குவிக்கும் எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பங்காளர் நிறுவனங்களுக்காக தேவனைத் துதிப்போம். கோவிட் 19 காரணமாக இக்கால சவாலான நேரத்தில் உலகெங்குமுள்ள இந்த பங்காளர் நிறுவனங்களின் பணிகளுக்கான தேவ தயவுக்காக மன்றாடுங்கள்.

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

Solverwp- WordPress Theme and Plugin