? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1இராஜாக்கள் 19:15-18

?  முழுவதும் இழக்கப்படவில்லை

ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற …ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்… 1இராஜாக்கள் 19:18

தென்னாபிரிக்க போயர் யுத்தத்தில், ஒரு மனிதன் தண்டிக்கப்பட்டான். குற்றவாளியாக கருதப்பட்டான். காரணம், யுத்தம் நேரத்தில், யுத்தம் செய்வதற்கு ஊக்குவிக்காமல், வீரர்களின் மனதைக் குழப்பி, யுத்தத்திலிருந்து பின்வாங்கச் செய்து, ஊக்கத்தை குன்றச் செய்ததே அவன் செய்த குற்றம். தென்னாபிரிக்க நகரமான லேடிஸ்மித்தான் தாக்கப்பட்டிருந்தது. போர்வீரர்கள் தற்காப்புமுறையில் வரிசையாக நின்றுகொண்டிந்தார்கள். எதிரிகளின் சேனையின் பலம், நகரம் பிடிக்கப்படப்போவது உறுதி என்றெல்லாம் கூறி போர்வீரர்களின் மனதைத் தளரச்செய்ய முயற்சித்தான். இவன் ஒரு துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கவில்லை. இவனுடைய ஆயுதமெல்லாம் வாய்வார்த்தைகள்தான். சோர்வடையச் செய்யும் யுக்தியே அவனது ஆயுதமாகும்.

நம்மைச் சோர்வடையச் செய்யும் முதல் எதிரி சாத்தான். அவன் பலவிதங்களில் எலியாவைச் சோர்வடையச் செய்திருந்தான் என்பது உறுதி. எலியாவின் பக்கத்தில் எல்லாம் இழக்கப்பட்டுவிட்டதாக உணரச்செய்தான். ‘நீ மட்டும் தனியாக விடப்பட்டி ருக்கிறாய்” என்ற எண்ணத்தைத் தூவினான். எலியா அதை நம்பிவிட்டான். எலியா மீண்டும் திரும்பிப்போய் செய்யவேண்டிய பெரிய காரியங்களை தேவன் அறிவித்தபோது, பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேர் இஸ்ரவேலில் மீதியாக தேவனால் வைக்கப்பட்டிருந்ததை அறிந்துகொண்டான்.

நம்மை சோர்வுக்குள் தள்ளுகின்ற சாத்தான் சில காரியங்களை மிக மோசமானவைகளாக மிகைப்படுத்திக் காட்டுவான். விசுவாசிகளைச் சோர்வடைய செய்வதற்காக தவறான தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். பல தடவைகளில் அவன் வெற்றிபெற்றும் விடுகிறான். சாத்தானின் பொய்களுக்குத் தேவன் தமது வார்த்தையில் தீர்வுகளைத் தந்துள்ளார். வேதாகமத்தில் மிகப் பெரிய அற்புதமான  பல வாக்குத்தத்தங்களைத் தந்திருக்கிறார். சாத்தானின் எதிர்மறையான முடிவுகளை மேற்கொள்ள எண்ணிலடங்கா நேர்மறைத் தீர்வுகளை வேதாகமத்தில் வைத்திருக்கிறார். நமது வாழ்க்கை முழுவதும் சுகமும் துக்கமும் நிறைந்ததாக இருக்குமானால் அது சாத்தானின் வேலையாகத்தான் இருக்கும். சாத்தானின் தந்திரங்களை எப்படி முறியடிக்க முடியும்? வேதாகமத்திலுள்ள வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். வேதாகமமே நம்மை ஊக்குவிக்கும் காரணி. வேத வசனத்தில் தேவ சத்தத்தை நாம் கேட்கப் பழகிக்கொண்டால், நாம் வேறு எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

? இன்றைய சிந்தனைக்கு:

தேவன் உன்னை உயர்த்தும்போது, சாத்தானால் உன்னைக் கீழே தள்ளமுடியாது.

? இன்றைய விண்ணப்பம்

அநேக மக்கள் கர்த்தருடைய வார்த்தையை வாசிக்கவும், கற்றுக்கொள்ளவும், புhpந்துகொள்ளவும் நாம் உதவி செய்யும்படிக்கு எமக்காக ஜெபியுங்கள். சிங்கள, தமிழ் மொழிகளில் எமது தபால்வழி வேதபாடங்கள் உட்பட, எமது பல்வேறு ஊழியங்கள் அவர்களது சொந்த வாழ்க்கைக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டுமென்று மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

Solverwp- WordPress Theme and Plugin