? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 19:9-10

?♀️  நான் மாத்திரம்

நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன். என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்… 1இராஜாக்கள் 19:10

புதிய உலகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் தீரனான பிரான்ஸிஸ் டிரேக் என்பவர், ஒருதடவை உலகைச் சுற்றி ஒரு நீண்ட பயணத்தை முடித்துவந்தார். கப்பலை சிறிய தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார். அப்போது, ஒரு பெரும் புயல் தோன்றிக் கப்பலை வெகுவாக அசைத்தது. கடல் பயணத்தில் வெகுகாலம் அடிபட்ட மனிதரின் அருகில் நின்ற ஒருவன் இப்படிக் கூறினான்: ஆழமான பெருங்கடல்களில் சூறாவளிப் புயல்கள் தாக்கியபோதும் உயிர்தப்பிய நான், நீர் தேங்கிய குட்டைபோலக் காணப்படும் இந்தச் சிறிய நதியில் மூழ்கி மரிக்கவேண்டுமா? பலதடவைகளில் சாத்தான் வருவிக்கும் பெரிய துன்பங்களிலும் சோதனைகளிலும் எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்கும் கிறிஸ்தவர்கள்கூட, ஒரு சிறிய துன்பம் வந்ததும் தடுமாறி விழுந்து தவிப்பதைக் கண்டிருக்கிறோம். எலியாவும்கூட இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் இப்போது காணப்படுகிறான்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் ராஜாவைச் சந்தித்திருக்கிறான் எலியா. அவன் பாகாலின் 450 தீர்க்கதரிசிகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று சவால் விட்டு ஜெயித்து, இஸ்ரவேல் மக்கள் தங்கள் அர்ப்பணிப்பைப் புதுப்பித்து மெய்யான தேவனாகிய கர்த்தரை வணங்கச்செய்தான். இந்த எலியா, இப்பொழுது  யேசபேலின் சவாலைக் கேட்டுப் பயந்து ஒடிவிட்டது மட்டுமல்ல, ‘நான் மட்டும் விடப்பட்டிருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்கள்” என்று தனக்காகத் தானே வருந்தினான். நம்முடைய சூழ்நிலைகளின் எதிர்மறைக் கருத்துக்களை கவனித்தால் நாமும் சுய பச்சாத்தாபத்தில் இறங்கிவிடுவோம்.

நம்முடைய வாழ்க்கையும்கூட பல துன்பங்களும் அநீதிகளும் நிறைந்தது, ஆனால் தேவனுடைய மக்கள் ஒருபோதும் தனியாக விடப்படுவதில்லை. தேவன் நம்மை பள்ளத்தாக்கின் வழியாக வழிநடத்துவார் (சங்.23:4). நம்முடைய வாழ்வில் பிரச்சனை வராது, பிரச்சனையே இராது என்று தேவன் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் அவர் எப்போதும் நம்மோடு இருப்பதாக வாக்களித்திருக்கிறார். ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபி.3:5). நாம் சுயபச்சாத்தாபத்துக்கு ஆளாகியிருந்தால், சோர்ந்துபோய் தலை கவிழ்ந்து இருந்துவிடக்கூடாது.  சூழ்நிலை எதுவாயிருந்தாலும் தேவன் நம்மோடிருப்பார். நீங்களும் தேவனும் எப்போதும் ஒன்றாக இருந்துவிட்டால் எந்தச் சூழ்நிலையையும் சந்தித்துவிடலாம். அவற்றின்மீது ஜெயம் பெற்றிடலாம்.

? இன்றைய சிந்தனை :

நீங்கள் தேவனோடு கூட இருந்தால் எப்போதும் நீங்கள் தனியாக விடப்படுவதில்லை.

? இன்றைய விண்ணப்பம்

எமது தலைமைத்துவ குழு மற்றும் ஊழியர் குழுவினருக்காக ஜெபியுங்கள். “அலுவலகத்திலிருந்து பணிபுரிய” மீண்டும் திரும்பும் நாம், ஊழியர் நலன் மற்றும் வருகை தருபவர்களின் நலன் குறித்து ஞானத்துடனும் ஒழுக்கத்துடனும், சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிப்படுத்திடவும் மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

Solverwp- WordPress Theme and Plugin