? சத்தியவசனம் – இலங்கை. ?? ]

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:9-17

தேவனுக்கு ஏற்றவன் யார்?

எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான். லூக்கா 18:17

தேவனுடைய செய்தி:

சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும்  தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது.

தியானம்: 

பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ  தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம்  சொந்தமாக இருக்கிறது.

பிரயோகப்படுத்தல் : “நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் ஸ்தோத்திரம்” என்று கூறுபவர்களைக்குறித்து வேதாகமம் என்ன கூறுகின்றது?

மற்றவரைக் காட்டிலும் நான் நல்லவனாக இருக்கின்றேன் என்று கூறுபவர் களைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? நான் அவ்விதம் கூறியுள்ளேனா?

“நான் ஜெபிக்கிறேன், நான் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில்  பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்” என்ற சுயம்சார்ந்த  எண்ணம் எனக்குள் வருமாயின், அதை நான் எப்படி மேற்கொள்வது?

“தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி” என்ற  உணர்வு எனக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா? 

தேவனின் இராஜ்யத்திற்குள் செல்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? 

எனது சிந்தனை

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin