? சத்தியவசனம் – இலங்கை. ?? [

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:14-20

பஸ்கா இரவு உணவு

நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசி;க்க மிகவும் ஆசையாயிருந்தேன். லூக்கா 22:15

தேவனுடைய செய்தி:

“தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லை” – இயேசு.

தியானம்:

இயேசு, அப்பத்தை எடுத்து தேவனுக்கு நன்றி கூறி “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். அப்படியே, திராட்சை ரசக் கோப்பையை எடுத்து “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” என்றார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இயேசு சீடர்களோடு சேர்ந்து பஸ்கா விருந்தை உண்ண விரும்பினார்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 14ன்படி, எத்தனைபேர் இயேசுவோடு கூட பந்தியிருந்தார்கள்? அவர்கள் யார்? 

தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து இவ்வசனங்களில் இயேசு கூறுவது என்ன? அது யாருடைய ராஜ்யம்?

ஏன் இயேசு அப்பத்திற்காக ஸ்தோத்திரம்பண்ணினார்? நாம் என்ன செய்கிறோம்?

“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று இயேசு கூறியதன் அர்த்தம் என்ன? இதற்கூடாக நாம் யாரை நினைவுகூரவேண்டும்?

“என்னுடைய சரீரம், என்னுடைய இரத்தம்” என்று இயேசு வலியுறுத்திக் கூறுவதன் அர்த்தம் என்ன?

வசனம் 20 கூறுகின்ற “புதிய உடன்படிக்கை” எப்படிப்பட்டது? அது யாருக்கானது? அதில் யார் அங்கம்வகிக்கின்றார்கள்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin