? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 21:23-38

அழியாத தேவ வார்த்தை 2

அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். லூக்கா 21:27

தேவனுடைய செய்தி:

தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். (வச.31)

தியானம்:

எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது. தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலம் நிகழவேண்டிய ஒன்றாயுள்ளது. தேவன் சினத்தின் காரணமாக பலர் கொல்லப்படுவார்கள். பலர் கைதிகளாக்கப்படுவார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

வானமும் பூமியும் ஒழிந்துபோம், தேவனுடைய வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. (வச. 33)

பிரயோகப்படுத்தல் :

வசனம் 26ன்படி, உலகத்திற்கு என்ன நேரிடுமோ என மக்கள் அஞ்ச ஆரம்பிப்பதற்கான காரணம் என்ன? நாம் சோர்ந்துபோகலாமா?

“உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்பதன் அர்த்தம் என்ன? தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் எது? (வச. 28)

அத்தி மர உதாரணம் கற்றுக்கொடுப்பது என்ன? இது எதற்கு அடையாளம்?

வசனம் 34ன்படி, எதற்கு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்? குடியில் மூழ்குவது, உலக காரியங்களில் ஈடுபடுவது சரியானதா?

வசனம் 35ன்படி, பூமியின் மக்களுக்கு ஒரு பொறியைப்போல் இருக்கப்போகின்ற விடயம் என்ன? அதற்குத் தப்பித்துக்கொள்வது எப்படி?

மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்க தகுதி பெற என்ன செய்யவேண்டும்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin