? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:54-62

பேதுருவின் மறுதலிப்பு

…கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.  லூக்கா 22:62

தேவனுடைய செய்தி:

கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். (வச.61)

தியானம்:

பேதுரு இயேசுவை மறுதலித்தான். அவன் பிரதான ஆசாரியனுடைய வாசலைக் காக்கிற வேலைக்காரியிடமும், குளிர்காய்ந்து கொண்டிருந்த ஒருவனிடமும், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனாகிய மல்குஸ் இன் இனத்தானாகிய ஒருவனிடமும் இயேசுவை தெரியாது என கூறினான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

எமது குற்றத்தை உணர்த்துகிற தேவனிடம் மனந்;திரும்புங்கள்.

பிரயோகப்படுத்தல் :

“இவனும் அவனோடிருந்தான்” என்ற வேலைக்காரியிடம், “ஸ்திரீயே, அவனை அறியேன்” என்று மறுதலித்தான் பேதுரு. நாம் எந்தவிடயத்தில் இயேசுவை மறுதலித்துக்கொண்டிருக்கிறோம்?

“நீயும் அவர்களில் ஒருவன்” என்றவனிடம், “மனுஷனே, நான் அல்ல” என்ற பேதுருபோல, சீடத்துவத்தை மறுதலித்துள்ளேனா?

“மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தவனிடம், “மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன்” என்ற பேதுரு போல நாம் வலியுறுத்தி மறுக்கின்ற காரியம் என்ன?

“நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று கர்த்தர் பேதுருவிடம் சொன்ன வசனத்தை நினைவுகூர்ந்த உடனே அவன் செய்தது என்ன?

“பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான்” இது மனந்திரும்புதலுக்கான முதற்படியானது எப்படி? மனங்கசந்து அழாமல் மனந்திரும்ப முடியுமா? நான் எதில் இன்னமும் மனங்கசந்து தேவனுக்கு முன்பாக அழாமல் இருக்கிறேன்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin