? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 21:1-6

இரண்டு காசு

அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்…  லூக்கா 21:4

தேவனுடைய செய்தி:

கர்த்தர் எமது கொடுத்தலைக் கவனிக்கின்றார்.

தியானம்:

ஓர் ஏழை விதவை காணிக்கைப் பெட்டியினுள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள். இந்த ஏழை விதவை கொடுத்த இரண்டு சிறிய நாணயங்களின் பெறுமதி, செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. காரணம், அவளுக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நல்ல காணிக்கையல்ல, மிகச் சிறப்பானதையே தேவனுக்குக் கொடுங்கள்.

பிரயோகப்படுத்தல் :

இன்று இயேசு நிமிர்ந்து, எமது கொடுத்தலைக் கவனித்துப் பார்த்தால், அதில் அவர் மகிழ்ச்சியடைவரா? அல்லத துக்கப்படுவாரா?

தேவாலய காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டும் அதில் பிரியப்படாததற்குக் காரணம் என்ன? தேவனுக்காகக் காணிக்கை கொடுப்பதில் காணப்பட வேண்டிய எனது மனப்பான்மை என்ன?

ஏழை விதவையின் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது. எனினும், தேவனுக்காக அதைக் கொடுக்க அவளைத் தூண்டியது எது?

சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தும், அவை ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் என இயேசு கூறியதன் காரணம் என்ன? எமது திருச்சபைஅலங்கரிப்பைக் குறித்த உங்கள் மனப்பான்மை என்ன?

எனது பெருமைக்குரிய பொருள் எது? இயேசுவிடம் அதை கொடுப்பேனா?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin