? சத்தியவசனம் – இலங்கை. ?? 

குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 24 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர்.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  24:16-22

?  நன்மை செய்!

…நீ எனக்கு நன்மை செய்தாய். நானோ உனக்கு தீமைசெய்தேன். 1சாமுவேல் 24:17

? தியான பின்னணி:

சவுல் தாவீதுக்கு கொடுத்த கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல, எனினும் தாவீது சவுலுக்கு நன்மை செய்தான். மன்னித்தான். வாய்ப்பு கிடைத்தும் சவுலை கொன்றுபோடவில்லை. இதனை தாவீதின் வார்த்தைகளுக்கூடாக சவுல் உணர்ந்துகொள்கிறான். தன் ஜீவனுக்காக ஆணையும் வாங்கிக்கொண்டான்.

? பிரயோகப்படுத்தல் :

❓ உமக்கு அல்லது உம்மைச் சார்ந்தவர்களுக்கு யாராவது பெரிய தீங்கு செய்திருக்கிறார்களா? அவர்களைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் வந்ததுண்டா? அப்படிப்பட்ட  ஒரு சிறிய  எண்ணம் கூட நம் ஆத்துமாவை அழித்துவிடும்! ஜாக்கிரதை!

❓ தாவீதைப் பாருங்கள்! தனது உயிரைக் குடிக்க அலைந்த சவுலை பழிவாங்காமல் நன்மை செய்கிறான். இதைத்தானே கர்த்தர் விரும்புகிறார். கர்த்தர் தமது நீதியை நிலைநாட்ட நான் இடமளிப்பேனா!

❓ பிறருடைய தவறை சுட்டிக்காட்டி அவர் திருந்த வாய்ப்பு அளிக்கின்றேனா? அல்லது அவரை எவ்விதத்தினாலாகிலும் கொன்று போடுகின்றேனா?

❓ கர்த்தருடைய பாதத்தில் எமது பிரச்சனைகளைக் கூறி நம்மை அவரது கரத்தில் ஒப்புவித்து அவர் தரும் நிம்மதி, சமாதானம், பாதுகாப்பை அனுபவிப்பேனா?

? தேவனுடைய செய்தி:

▪️ தனது பிழையை ஏற்றுக்கொண்டாலும், மன்னிப்பு கேட்டாலும்கூட, முன்பு செய்த பாவத்தை விட்டுவிட மனமின்றி, மனந்திரும்பாமல் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருப்பவர்கள் உண்டு. சவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல உதாரணம்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

▪️கர்த்தரை நம்பி நான் நன்மை செய்ய வேண்டும்.

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? இன்றைய விண்ணப்பம்

கடந்த வாரத்தில், தமிழ் பேசும் விசுவாச ஜெப பங்காளர்களோடு நாம் நடத்திய முதலாவது ZOOM ஐக்கியத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்துவதோடு, இவ்வித வாய்ப்புக்களை மேலும் அபிவிருத்தி செய்திட தேவ ஞானத்தையும் தயவையும் வேண்டி மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் அல்லது https://www.facebook.com/sathiyavasanam/ முகப்புத்தகத்தில் வாசிக்கலாம். நன்றி.)

?‍♂️ Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

Comments (328)

 1. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 2. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 3. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 4. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 5. Reply

  Бокс. Українець Продан виступить в андеркарді бою Джошуа AnthonyJoshua Смотрите видео Усик Джошуа. Смотрите также: Усик против Джошуа / Пресс конференция перед боем / Битва взглядов, Джошуа vs. Усик ФАНАТЫ В ШОКЕ от Разницы В ГАБАРИТАХ – УСИК слишком МЕЛКИЙ для AJ, СЛОВА ПЕРЕД БОЕМ!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *