📖 சத்தியவசனம் – இலங்கை.
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:44-49
இவைகளுக்குச் சாட்சிகளாயிருங்கள்!
மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:47
தேவனுடைய செய்தி:
வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி, மனதைத் திறவுங்கள்.
தியானம்:
இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தம்மைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். (வசனம் 48)
பிரயோகப்படுத்தல் :
சீஷர்களுக்கு வேதாகமத்தைப் புரிந்துகொள்ள இயேசு என்ன செய்தார்?
நடந்தவை அனைத்தையும் பார்த்தவர்கள் அதற்குச் சாட்சியாக இருப்பது அவசியமா? சீடர்களிடம் இயேசு எதிர்பார்த்தது என்ன?
மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டியது அவசியமா? ஏன்?
மக்கள், தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை நாம் கூறாவிட்டால் என்ன நேரிடும்?
மக்கள் மனம்மாறினால் தேவன் அவர்களை மன்னிப்பாரா? அந்த மன்னிப்பின் நிச்சயத்தை நீர் பெற்றதுண்டா?
உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி கூற என்ன செய்யலாம்?
பிதாவானவர் வாக்குப்பண்ணிய, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் இன்று நீங்கள் பெலனடைந்துள்ளீர்களா?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.
