📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 20:9-21
மூலைக்கல்
அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்… லூக்கா 20:18
தேவனுடைய செய்தி:
திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் கர்த்தர்.
தியானம்:
குத்தகைக்கு விடப்பட்ட திராட்சை தோட்டத்தின் பலனைப் பெற ஒருவரை அனுப்பியபோது, தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். வேறொருவனை அனுப்பியபோதும் அப்படியே செய்தார்கள். மூன்றாமவனை அனுப்பியபோதும், அவனைக் காயப்படுத்தினார்கள். தனது சொந்த மகனை அனுப்பியபோது, “இவன்தான் சொத்துக்கு உரியவன், நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்” என்று கூறி மகனையும் கொன்றுபோட்டார்கள்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவன் கிறிஸ்துவை நமக்காகவே தந்தார்.
பிரயோகப்படுத்தல் :
எஜமானின் ஊழியரை அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பியவர்கள் யார்? ஏன்?
திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே எஜமானின் மகனைத் தள்ளி, கொன்று போட்டவர்கள் யார்? அந்த மகன் யாராக இருக்கக்கூடும்?
திராட்சைத் தோட்ட உரிமையாளர் தனது தோட்டத்தை மீட்க செய்ய வேண்டியது என்ன?
“கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று” என்பதன் அர்த்தம் என்னவாக இருக்கின்றது?
பிறருக்குச் சொந்தமான எதையாகிலும் இன்று என்னுடையதாக நான் உரியமைக் கொண்டாடுகிறேனா? நான் செய்ய வேண்டியது என்ன?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.