📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:1-8
பலனளிக்கும் தேவன்
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்… லூக்கா 18:1
தேவனுடைய செய்தி:
நாம் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்.
தியானம்:
தேவனைக் குறித்தும் சக மனிதரைக்குறித்தும் கவலைப்படாத ஒரு நியாயாதிபதியிடம் “எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்” என்றாள் விதவை பெண். பல நாள் அக்கறையற்று இருந்த அவன், அவளது தொந்தரவு நிமித்தம் உதவிசெய்வான் அல்லவா? இரவும் பகலும் தேவ மனிதர்களுடைய வேண்டுகோளுக்கு அதைவிட வேகமாக இறைவன் உதவி செய்ய ஆவலுடன் இருக்கிறார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவன் நீடிய பொறுமையாயிருந்து நியாயம் செய்கின்றார்.
பிரயோகப்படுத்தல் :
சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்ய, நம்பிக்கை இழக்காதிருக்க, இயேசு கற்பித்த உவமையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வது என்ன?
நாம் தேவனைக்குறித்தும் சக மற்றவர்களைக் குறித்தும் அக்கறையற்று இருப்பது சரியானதா? நான் யாரிடமாவது அநீதியுடன் நடந்துகொள்கின்றேனா?
அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று நியாயாதிபதி எண்ணியதைக் குறித்து என்ன சிந்திக்கின்றீர்கள்?
தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார் என்ற விசுவாசம் எனக்குண்டா?
மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.