? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  சங்கீதம் 31:1-7; 2கொரிந்தியர் 1:2-4

?  ஆத்துமாவின் ஆறுதல்

என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. சங்கீதம் 94:19

எனது வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியிலே தனித்துவிடப்பட்டேனோ என்ற ஒரு உள்ளுணர்வோடு போராட நேர்ந்தது. அடுத்த அடி எங்கே எப்பக்கம் வைப்பது என்று அறியாமல் திகைத்து நின்றேன். ‘நான் தடுமாறிவிழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் நான் விசாரப்படுகிறேன்” (சங்கீதம் 38:17,18) என்ற சங்கீதக்காரனின் ஜெபத்தை ஏறெடுத்தேன். என் இதயத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள் அலைமோதின.

இதனைப் படிக்கும் நண்பரே, நீரும் உம் உள்ளம் உடைந்த நிலையில் தத்தளிக்கிறாயா? கலக்கத்தைவிட்டு, கா;த்தரை நோக்கிப் பார். என்னைத் தாங்கிய தேவ வாh;த்தையே உன் சிறுமையில் உனக்கு ஆறுதலும் மீட்பும் அருளுவதற்கு வல்லமையுள்ளதாக உன்னிடத்திற்குக் கடந்துவரும் (சங்கீதம் 119:49,50).

இன்னும் ஒருதடவை, பயங்கர வியாதியினால் தாக்குண்டு, உள்ளத்தில் விசாரங்கள் பெருக செய்வதறியாமல் தவித்திருந்தேன். மூன்றாம் நாளிலே கர்த்தர் தாமே யோர்தான் நதியிலே தாம் செய்த மகத்தான அற்புதத்தை நினைவுபடுத்தி என்னை ஆறுதல்படுத்தினார் (யோசுவா 3:1-17). என் ஆத்துமா தேற்றப்பட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். தேவன் தமது கிரியையை என்னில் ஆரம்பித்தார். தேவபிள்ளையே, மரணபோராட்டத்தில் அகப்பட்டு உன் உள்ளமும் விசாரத்தினால் நிரம்பியிருக்கிறதா? தேவன் உன்னை தேற்ற வல்லவராயிருக்கிறார். இப்படியே பலவித காரணங்களினால் பெருகும் விசாரங்களும், என்னவாகுமோ என்ற அங்கலாய்ப்புகளும், குடும்பம் உடைந்துவிடுமோ என்ற ஏக்கங்களும் துக்கங்களும் பெருகி நிம்மதியின்றி தவிப்பவர்கள் ஏராளம்.

பிரியமானவர்களே, பவுலடியார் நமது தேவனுக்கு ஒரு அருமையான நாமம் ஒன்றைச் சூட்டியுள்ளார். ‘சகலவிதமான ஆறுதலின் தேவன்”. இதிலே ‘சகல’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ஆம், சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு ஆறுதல் செய்கிறவர் (2கொரிந்தியர் 1:3,4), ‘அவரே எம் உபத்திரவத்தைப் பார்த்து, நமது ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறவர்” (சங்கீதம் 31:7), ‘அவா; நம் ஆத்துமாவைத் தேற்றுகிறவர்” (சங்கீதம் 23:3). இவ் வார்த்தைகள் பொய்யல்ல. வியாகுலங்கள் பெருகும் நேரங்கள், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று தவிக்கும் நேரங்கள்தான், தேவனுடைய அன்புக் கரத்தின் ஆறுதலை நாம் அதிகமாக அனுபவிக்கும் நேரம். அப்போது, விசாரங்களுக்கு மேலாக வியக்கத்தக்க மகிழ்ச்சியால் நமது ஆத்துமா நிரம்புவதை அறிந்துகொள்ளலாம். ஆத்தும வியாகுலங்களை நான் அனுபவித்திருக்கிறேனா? இன்று யாரை நான் தேடி நாடுகின்றேன்?

? இன்றைய சிந்தனைக்கு:

தேவனை மறந்து நான் அழுதேனா? அல்லது தேவனைப் பற்றிக்கொண்டு ஜெயத்தோடு எழும்பினேனா?.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – சகோதரி சாந்தி பொன்னு

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

Comments (248)

 1. Reply

  Цены на услуги и консультации
  психолога. Рейтинг психологов
  Консультация психолога в Киеве Сімейні консультації.
  Консультация психолога. Консультация Психолога – Профессиональная
  поддержка. Цены на услуги и консультации психолога.
  Консультация психолога.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *