குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:39-44

?  கல்லைப்போலான இருதயம்!

கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார்… 1சாமுவேல் 25:39

? தியான பின்னணி:

இரவு மதுபானத்தை அதிகமாக அருந்திய நாபாலிடம் எந்தக் காரியத்தையும் சொல்லாத அபிகாயில், மறுநாள் காலையில், எல்லாவற்றையும் அறிவித்த பின்பு, கர்த்தர் நாபாலை வாதித்ததால், ஏறக்குறைய பத்து நாளுக்குப் பின்பு, நாபால் மரித்தான். பின்பு, அபிகாயில் தாவீதின் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.

? பிரயோகப்படுத்தல் :

❓ எனது திருமண வாழ்க்கை, வாழ்க்கை துணை எப்படிப்பட்டவர்? நான் எனது துணையின் நன்மைக்கான காரியங்களைச் செய்கின்றேனா?

❓ இன்று இராத்திரியிலே கர்த்தர் உன்னை எடுத்துக்கொண்டால், நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?

❓ ‘என் காயத்துக்கு மருந்து இவன்தான் அல்லது இவள்தான்” என்று எண்ணி, அவசரப்பட்டு திருமண வாழ்வில் தம் துணையை தேடிக்கொண்டவர்களைப் பற்றி சிந்தித்துள்ளீரா? அவர்களின் தீர்மானம் எப்படிப்பட்டது?

❓ தவறான முடிவு எடுத்துவிட்டு பின்னர் வருத்தப்படாதே! இன்று முதல் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து அவருடைய சித்தத்தை அறிந்துகொள்வாயா!

? தேவனுடைய செய்தி:

▪️ என்ன நேரிட்டாலும், நான் தேவனைத் தேட வேண்டும்!

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ஒவ்வொருநாளும் கட்டப்பட வேண்டிய ஒரு மாளிகை போன்றது! 

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

4 Responses

  1. Необходимая информация
    5. Экспертные рекомендации по установке кондиционера
    фреон для кондиционера [url=https://www.ustanovit-kondicioner.ru/]https://www.ustanovit-kondicioner.ru/[/url] .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *