📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:18-30
யார் இரட்சிக்கப்பட முடியும்?
உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்… லூக்கா 18:22
தேவனுடைய செய்தி:
தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை.
தியானம்:
நாம் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு. தேவையற்ற பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தால், பரலோகத்தில் பலன் கிடைக்கும். நாம் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ முடியும்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்.
பிரயோகப்படுத்தல் :
“நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்” ஆகிய சட்டங்களை நான் பின்பற்றுகின்றேனா? இல்லையா?
தேவன் கூறிய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்துவந்தாலும், தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்ற காரியம் என்ன?
“ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்பதன் தாற்பரியம் என்ன? செல்வத்தைக் குறித்த நமது மனப்பான்மை என்ன?
எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பும் பணக்காரரைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? இயேசு என்ன கூறுகின்றார்?
“நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே” என்று பேதுரு வைப்போல நாமும் கூறுகிறோமா? அல்லது தேவனுடைய ராஜ்யத்தினி மித்தம் எல்லாவற்றையும் விட்டுவிட ஆயத்தமாயிருக்கிறோமா?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.