📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:22-29
கிறிஸ்துவின் மகிமை
அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.மாற்கு 16:12
தேவனுடைய செய்தி:
கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா!
தியானம்:
இயேசு உயிர்த்தெழுந்தார் என்றும், கல்லறை வெறுமையாக உள்ளது என்றும் பெண்கள் பிரசித்தம்பண்ணினார்கள். அவர்கள் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை. இதைக்குறித்து பேசிக்கொண்டிருந்த எம்மாவூருக்குச் செல்லும் இருவரைப் பார்த்து, வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் கிறிஸ்து வைக்குறித்துச் சொல்லியவைகளை இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
சத்தியத்தை சரியாக அறிந்துகொள்ள வேதவாக்கியங்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
பிரயோகப்படுத்தல் :
பெண்கள் கூறுகின்ற ஆச்சரியமான தகவல்களை நம்பாத யூத சமுதாயத்தினைச் சேர்ந்த சீடர்களைப்போல இன்று கிறிஸ்தவர்கள் உள்ளனரா?
கல்லறை வெறுமையாக இருந்ததைக் கண்ட அனைவரும் சந்தேகப்படுவது என்ன? எவ்விதம் அவர்கள் இதிலிருந்து மீண்டார்கள்?
சீடர்கள் வேத வாக்கியங்களை அறிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை உணராமல் இருந்தது ஏன்? உணர்ந்துகொண்டபோது அவர்கள் என்ன செய்தார்கள்?
தீர்க்கதரிசிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் ஏன் நாம் நம்பவேண்டும்? கிறிஸ்துவைப்பற்றி பழைய ஏற்பாட்டில் நீங்கள் கற்றுக்கொண்டவை என்ன?
கிறிஸ்துவின் உயிர்த்த மகிமையை காண நான் என்ன செய்யலாம்?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.

Visit My Website
Check out my website
Check out my website