📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

எம்மாவூர் சென்ற சீஷர்கள்

அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். லூக் 24:15

தேவனுடைய செய்தி:

எல்லாவிதமான விவாதங்களைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.

தியானம்:

எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் எம்மாவூர் இருந்தது. எருசலேமில் நடந்தவை அனைத்தையும் குறித்து அங்கு சென்றுக்கொண்டிருந்த இரு சீடர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

எமது கண்கள் இயேசுவைக் காண பழக்குவோம்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 16ன்படி, “இயேசுவை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது” ஏன்? இன்று இவ்விதமான மக்கள் நம்மத்தியில் உள்ளனரா? அவர்கள் பேசிக்கொள்வது என்ன?

எம்மாவூர் சென்ற இயேசுவின் இரண்டு சீஷர்கள் பேசிக்கொண்டது என்ன? அதை இயேசு கவனித்தாரா?

நடந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து விவாதித்துக்கொண்டிருப்பது சரியா, தவறா, இங்கு இயேசு அருகே வந்து அவர்களோடு நடந்தது ஏன்?

சரியான பக்கத்தைக் காணமுடியாத மக்கள், ஒருபக்க சார்பாக பேசும் போது நீர் எவ்வாறு அதற்கு பதிலளிப்பீர்?

நீங்கள், மற்றவர்களுடன் சேர்ந்து நடக்கும்போது பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் என்ன? அவற்றை ஆரோக்கியமானவைகளாக மாற்ற என்ன செய்யலாம்?

சீடர்கள் இருவரின் முகங்கள் சோகத்தால் நிரம்பி இருக்க காரணம் என்ன?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “ஜனவரி 14 சனி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin