📖 சத்தியவசனம் – இலங்கை
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி 2:25-30
எப்பாப்பிரோதீத்து பற்றி
…நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள். பிலிப்பியர் 2:29
தேவனுடைய செய்தி:
தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
தியானம்:
எப்பாப்பிரோதீத்து போன்ற நபர்களுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும். அதாவது கிறிஸ்துவின் பணிக்காக தமது உயிரையே பணயம் வைப்பவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களை ஏற்றுக்கொள்வது அவசியம். சுவிசேஷ பணியில் ஈடுபட்ட எப்பாப்பிரோதீத்து நோயுற்றான். சாவுக்கு அருகில் இருந்தான்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
இயேசுவுக்கு முதலிடம் கொடுத்து, சுவிசேஷத்தை நேசிக்கும் சாதாரண கிறிஸ்தவருக்கு மதிப்பளியுங்கள்.
பிரயோகப்படுத்தல் :
இன்று நாம் யாருக்கு மரியாதை செலுத்துகின்றோம்? பணம், பதவி உள்ள நபர்களுக்கா? அல்லது தேவபயமுள்ளவர்களுக்கா?
தேவன் மதிக்கின்ற மக்களுக்கு உங்கள் சபை காட்டும் மரியாதை என்ன? அவர்களின் நற்செய்தி பணியில் கரங்கோர்ப்பீர்களா?
உங்கள் சபைக்கு ஒரு வேலைக்காரனாயிருக்க விரும்புகிறீர்களா? அது எந்த வேலையாயினும்? கீழ்ப்படிவீர்களா?
தன் பிராணணையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருக்கின்ற ஊழியர்களுக்காக ஜெபிக்கின்றீரா?
நாம் யாரை மதிக்க வேண்டும், அது ஏன் என்பதைக் குறித்து சிந்தியுங்கள்.
இயேசுவுக்கு எப்படி முதலிடம் கொடுப்பது? அவர் பணிக்காக நேரத்தை எவ்வாறு செலவிடுவது?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.
