📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 21:7-22
அழியாத தேவ வார்த்தை 1
உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். லூக்கா 21:19
தேவனுடைய செய்தி:
என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.(வச.17)
தியானம்:
இயேசுவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், “நானே கிறிஸ்து” என்றும், “வேளை வந்தது” என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். வஞ்சிக்கப்படாதிருங்கள்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. (வச.18)
பிரயோகப்படுத்தல் :
யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது என்ன செய்யக்கூடாது? ஏன்?
பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது என இயேசு கூறியதன் அர்த்தம் என்ன? இன்று உலகில் இவை நிகழுகின்றனவா?
வசனம் 12ன்படி, தேசத்தின் அதிகாரிகள் யாரைக் கைது செய்வார்கள்? யாரை சிறையில் தள்ளுவார்கள்? ஏன்?
வசனம் 13ன்படி, இயேசுவைப் பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு, உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துபவை எவை? எப்படி?
வசனம் 16ன்படி, உங்களை ஏமாற்றுபவர்கள் யார்? உங்களைக் கொலை செய்பவர்கள் யார்? யார் நிமித்தம்?
“ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது” என்று இயேசு கூறுவதினால், நாம் செய்யவேண்டியது என்ன? இன்று நான், எனக்குத் தீமை செய்கின்றவர்களுக்கு எதிராக என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.