📖 சத்தியவசனம் – இலங்கை
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1பேதுரு 3:8-18
சரியான ஆரம்பம்
உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல…. 1பேதுரு 3:15
பல தோல்விகள் தவறான ஆரம்பத்தினால்தான் வருகிறது என்பதை மறுக்கமுடியாது. அதேசமயம், சிலசமயங்களில் நமக்கிருக்கும் பக்தியும் வைராக்கியமுமே நமக்குள்ஒருவித பெருமையை வளர்த்துவிடுகிறது என்பதையும் மறுக்கமுடியாது. அதனாலேயே நாம் நமது சாட்சியை இழந்து, வாழ்வில் தோற்றுவிடுவதுமுண்டு.
தானியேலும் நண்பர்களும் பெருமை பேசாமல், அவதானமாக செயற்பட்டு தங்கள் மனஉறுதியை ஆரம்பத்திலேயே நிலைநாட்டிவிட்டனர். இவர்கள் இப்படித்தான் என்றுஅந்த பிறவின பிரதானிகள் கண்டுகொள்ளத்தக்கதாக ஆரம்பித்திலேயே நடந்துகொண்டார்கள். இதனால் இறுதிவரை அவர்களால் தேவனுக்கு சாட்சிகளாக நிற்க முடிந்தது. சிலசமயங்களில் நமது வைராக்கியமான ஆரம்பம் பிறருக்குக் கேலியாக இருக்கக்கூடும். ஆனால், அதுவே பின்னால் நமக்கு வேலியாகவும் அமைந்துவிடும். பிறர் என்னநினைப்பார்கள் என்ற எண்ணமே தப்புச் செய்வதிலிருந்து நம்மை விலக்கி பாதுகாக்க உதவியாய் இருக்கும் சந்தர்ப்பமும் உண்டு.
அடுத்ததாக தானியேல், பிரதானிகளின் தலைவனுடனும் விசாரிப்புக்காரனுடனும் பேசிக்கொண்ட விதத்தைச் சற்றுக் கவனியுங்கள். “நாம் யூதர், இந்த உணவு நமக்கு அருவருப்பானது” என்று பெருமை பேசி, கல்தேயரின் மனதை அவர்கள் புண்படுத்தவில்லை. அப்படிப் பேசியிருந்தால் அந்த அதிகாரிகள் ஆத்திரப்பட்டிருப்பார்கள். ஆனால், தானியேலோ பிரதானிகள் தலைவனிடத்தில் “வேண்டிக்கொண்டார்” என்று வாசிக்கிறோம். விசாரிப்புக்காரனிடம், “இப்படிச் செய்துபாரும், சரிவராவிட்டால் விட்டுவிடும்” என்று எத்தனை தாழ்மையாய் ஆலோசனை சொன்னார் பாருங்கள். அவர்கள் பேசிய விதத்திலேயே அந்த அதிகாரிகள் மனம் இளகியிருப்பார்கள். தானியேலின் பக்தி அவரைப் பெருமைப்படவிடவில்லை; மாறாக, இன்னும் தாழ்மைக்குள் வழிநடத்தியது.
இன்று, தம்மைக் கிறிஸ்தவர்கள், ஊழியர்கள், தலைவர்கள் என்று சொல்லி முதன்மைஇடங்களையும் மதிப்பு மரியாதையையும் எதிர்பார்க்கிறவர்களும், பெருமை பேசி பிறரைப் புண்படுத்துகிறவர்களும் பலர்! இது தேவனுக்கு கீர்த்தியை அல்ல; அபகீர்த்தியையே கொண்டுவரும். அத்திபாரமும் ஆரம்பமும் கிறிஸ்துவுக்குள் போடப்பட்டு, நம் வாழ்வு சரியாக எழும்புமானால், கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதும், அவருக்கு மாத்திரமே புகழைக் கொண்டுவருவதும், சமுதாய அழுக்கிலிருந்து நம்மை வேறுபடுத்தி, இப் பாவ உலகில் வெளிச்சமாகவும், உப்பாகவும் வாழுவதும் நமக்குக் கடினமாக இராது. ஏனெனில் கர்த்தரே நமக்கு உதவிசெய்வார். நமக்கிருக்கும் பக்தி, பெருமையை அல்ல, தாழ்மையையே கற்றுத்தரவேண்டும்.
💫 இன்றைய சிந்தனைக்கு:
என்னிடம் பெருமை இல்லை என்று நாம் நினைப்போம்; ஆனால் சந்தர்ப்பங்கள்தான் இதை உறுதிப்படுத்தவேண்டும். இதைக் குறித்த என் மனநோக்கு என்ன?
📘 அனுதினமும் தேவனுடன்.

Use the 1xBet promo code 2023 to get a VIP Sports Bonus. You will also receive a welcome bonus of €/$ 1950 and 150 free spins when you use this bonus code when registering at 1xbet Casino. 1xbet sports promo code Thanks to the bonus every new player can increase their chances of winning and playing with bonus money.
A free 1xBet promo code guarantees a maximum bonus of 100%. The number of promo codes issued is limited by the terms of the promotion. 1xbet ghana bonus After the end of the promotion it is your turn to issue a new code. The code is always published on our website as a current and valid 1xbet promo code.
The service will help you to attract the indexing robots of Google search engine (Googlebot) indexation backlinks and get indexed your web page or backlinks faster.