செப்டெம்பர் 16 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி 3:1-7

இருளுக்குள்  இருந்தது  போதும்!

என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். பிலிப்பியர் 3:1

தேவனுடைய செய்தி:

தேவனுடனான உங்கள் உறவை சரிசெய்து கொள்ளுங்கள்.

தியானம்:

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் வரும் இரட்சிப்பைக் குறித்து உறுதியுள்ளவர்களாக இருங்கள். உங்கள் சொந்த முயற்சிகளின்மேல் நம்பிக்கை வைக்க வேண்டாம்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 2ல், நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று கள்ளப்போதகர் களை பொல்லாத வேலையாட்கள் என்று பவுல் கடுமையான வார்த்தைகளைக் குறிப்பிடக் காரணம் என்ன?

நாம் செய்யும் எந்தக் காரியமும் நம்மைப் பரலோகம் கொண்டுபோய் சேர்க்காது. நம் மீதோ, நமது செயல்களின் மீதோ நாம் நம்பிக்கை வைக்கக்கூடாது. அது இரட்சிக்கப்பட தேவையான ஒன்றல்ல.

வசனம் 6ல், திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன் என பவுல் கூறியது எதை? ஏன்?

மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால், அதற்கு பவுல் தனது வாழ்விலிருந்து எடுத்துக்காட்டும் உதாரணங்கள் என்ன (வசனம் 6)?

நமக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணியதுண்டா? உங்கள் இரட்சிப்புக்கு இயேசுவை மட்டுமே நம்புவீர்களா?

கிறிஸ்துவுக்காக பெருமைதரும் சுய இலாபத்தை விட்டுவிட ஆயத்தமா?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “செப்டெம்பர் 16 சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin