📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:35-46
நிறைவேறும் வேதவாக்கியம்!
நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள்…லூக்கா 22:46
தேவனுடைய செய்தி:
என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று இயேசு ஜெபம்பண்ணினார்.
தியானம்:
“வேதவாக்கியம் சொல்கிறபடி, “மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.” இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார் இயேசு.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
பிரயோகப்படுத்தல் :
“ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா” என இயேசு கேட்டபோது, சீடர்கள் “ஒன்றும் குறைவாயிருந்ததில்லை” என்றார்கள். இன்று என்னிடம் ஏதாகிலும் குறைவு உள்ளதா? பொருளாதாரத்தில்?
அக்கிரமக்காரரில் ஒருவனாக இயேசு எண்ணப்பட்டது ஏன்? யாருக்காக?
வசனம் 41ன்படி, இயேசு முழுங்காற்படியிட்டு ஜெபித்ததுபோல நான் எனக்காக, பிறருக்காக ஜெபிக்கின்றேனா?
பிதாவின் சித்தத்திற்கு என்னை விட்டுக்கொடுக்கின்றேனா?
வசனம் 44ன்படி, இயேசு எவ்வளவாக ஜெபித்தார்? எப்படியாக ஜெபித்தார்?
சோதனைக்குட்படாதபடி, ஜெபிக்க கூறுவதன் இரகசியம் என்ன? எனது வாழ்வில், ஜெபத்திற்கு நான் கொடுக்கின்ற முக்கியத்துவம் என்ன?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.

I came to this site with the introduction of a friend around me and I was very impressed when I found your writing. I’ll come back often after bookmarking! safetoto