📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:63-71
சர்வவல்லமையுள்ள மனுஷகுமாரன்
இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் லூக்கா 22:69
தேவனுடைய செய்தி:
இயேசுவே கிறிஸ்து என்பதை நான் விசுவாசிக்க வேண்டும்.
தியானம்:
இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து, அவரது கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்தார்கள். ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, ஆலோசனைச் சங்கத்தில் இயேசுவைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அநேக தூஷணவார்த்தைகளை அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
இயேசு தேவனுடைய குமாரனாக இருக்கிறார்.
பிரயோகப்படுத்தல் :
இயேசுவை நான் பார்க்கின்ற விதம் எப்படிப்பட்டது? நான் அவரை நம்புகின்றவனாக பார்க்கின்றேனா, அல்லது அவர் மீது குற்றம்சுமத்துபவனாக அவரைப் பார்க்கின்றேனா?
இயேசுவின் கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்தவனுக்கும் எனக்கும் வித்தியாசம் என்ன? நானும் அவனைப்போல நடந்துகொண்ட சந்தர்ப்பம் எவை?
இயேசுவை அவமானப்படுத்திய சந்தர்ப்பங்களுக்காக நான் வருந்துகின் றேனா? அவரிடம் மன்னிப்பு நாடுவேனா?
அநேக தூஷணவார்த்தைகளை அவருக்கு விரோதமாகச் சொன்னார்களே, எனது வாயிலிருந்து அப்படியாக பேசப்பட்ட சொற்கள் என்ன? அவற்றை அறிக்கையிட்டு அகற்றிப்போடுவேனா?
சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் மனுஷகுமாரனுக்கு சாட்சியாக வாழ்வேனா?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.
Your explanation is organized very easy to understand!!! I understood at once. Could you please post about majorsite ?? Please!!