📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 143:1-12
காலமே தேவனைத் தேடு
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்.. சங்கீதம் 143:8
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மருமகளாகப் போகிறவள், “காலையில் மாமியார் தன்னை எழுப்பக்கூடாது” என்று ஒரு நிபந்தனை வைக்கிறாள். அப்போது நிகழ்ச்சியை நடத்துகிறவர், “நீ எத்தனை மணிக்கு எழுந்திருப்பாய்” என்று கேட்டதற்கு இந்த இளம்பெண் சொன்ன பதில், “காலை 9மணி.” இதுதான் இன்றைய இளம் சமுதாயத்தினரின் வாழ்வுமுறையோ! பாவமும் பாடுகளும் நிறைந்த இவ்வுலகத்திலே, கர்த்தருடைய வழிகளில் தடுமாற்றமின்றி நடப்பதற்கு அனுதினமும் அவரது சமுகத்தை நாம் தேடவேண்டியது முக்கியமாகும். அதற்கு எதற்கு அதிகாலை? என்றுகூட இன்று மக்கள் கேட்கிறார்கள். அதிகாலை நிர்மலமான நேரம்; அமைதியான அந்த நேரம் தேவனோடு உறவாட உன்னத நேரம் என்பதை கர்த்தருடைய பிள்ளைகள் நாடித் தேடி, அனுவித்த சாட்சிகள் அநேகம். நாளின் முதல் நேர்தைக் கர்த்தருக்குக் கொடுப்பது எத்தனை ஆனந்தம் தெரியுமா!
தன்னை அழைத்த தேவனைச் சந்திக்க அதிகாலையில் எழுந்தார் ஆபிரகாம் (ஆதி. 19:27). தன்னைத் தெரிந்துகொண்ட தேவனை ஆராதிக்க ஒரு பலிபீடத்தைக் கட்டும் படிக்கு அதிகாலையில் எழுந்தார் யாக்கோபு. (ஆதி.28:18). தேவனைத் தரிசிக்க மோசே, அதிகாலையில் சீனாய் மலையில் வந்து சேர்ந்தார் (யாத்.34:4). தமக்காக ஒரு குழந்தையைக் கேட்ட அன்னாளும், எல்க்கானாவும் அதிகாலையில் கர்த்தரின் பாதத்தில் விண்ணப்பித்தனர் (1சாமு. 1:19). தனது பிள்ளைகளைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களுக்காக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்த, அதிகாலையில் எழுந்தார் பக்தன் யோபு (யோபு 1:5). தேவனைத் துதித்து, ஜெபிக்க தாவீது ராஜா அதிகாலையில் எழுந்திருந்தார் (சங்.119:147, 57:8). காலமே எழுந்திருந்து நகரத்தின் பிரபுக்களோடு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான் எசேக்கியா (2நாளா.29:20) நமது ஆண்டவராகிய இயேசுகூட அதிகாலையில் எழுந்து வனாந்தரமான ஒரு இடத்தை நாடிச் சென்று ஜெபித்தார் (மாற்கு 1:35). ஆம்! சந்தடியற்ற அதிகாலை நேரம், அமர்ந்த தண்ணீரைப் போன்றது. நமது உள்ளங்களில் எவ்வித அழுத்தங்களும் இல்லாத அருமையான நேரம் அது. அதிக சந்தடிகள் மிக்க இந்த உலகம் எழுந்திருப்பதற்கு முன்னர், கர்த்தரின் மெல்லிய சத்தத்தைக் கேட்பதற்கு உகந்த நேரம், இந்த அதிகாலை நேரம். அதனாலேயே தேவபக்தர்கள் தேவசத்தத்தைக் கேட்பதற்காக, பொழுது புலர்வதற்கு முன்பதாக எழுந்திருந்து, அவர் பாதத்தை நாடினார்கள். நாம் எழுந்திருப்பதற்கு முன்னரே ஆண்டவர் நமக்காகக் காத்துநிற்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? பாடுகள் நிறைந்த வாழ்க்கையிலே, நம்மை அன்போடு தேற்ற, வழிநடத்த, போதித்து புத்திசொல்ல, ஆசீர்வதிக்கக் காத்திருக்கும், அன்பன் இயேசுவின் பாதத்தை அதிகாலையிலேயே நாடுவோமாக.
💫 இன்றைய சிந்தனைக்கு:
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிற நேரம் அதிகாலை அனுபவமா?
📘 அனுதினமும் தேவனுடன்.

அதிகாலை நேரம் ஆண்டவரை துதிக்க உகந்த நேரம் என்பதை ஆணித்தரமாக இன்றைய தியானம் விளக்கியுள்ளது..நன்றி.
I’ve been searching for hours on this topic and finally found your post. baccaratsite, I have read your post and I am very impressed. We prefer your opinion and will visit this site frequently to refer to your opinion. When would you like to visit my site?