📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:21-34

தாழ்மையாக இரு!

…நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன். லூக்கா 22:27

தேவனுடைய செய்தி:

உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக் காரனைப்போலவும் இருக்கக்கடவன்.

தியானம்:

தேவன் திட்டமிட்டபடியே மனுஷகுமாரன் மரணத்துக்கேதுவாககிறார். ஆனாலும், மனுஷகுமாரனைக் கொலை செய்ய காட்டிக்கொடுக்கின்ற மனிதனுக்கு ஐயோ.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும்         உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.

பிரயோகப்படுத்தல் :

உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன?

யார் மிகவும் முக்கியமானவன்? மேசையின் அருகே உட்கார்ந்திருப்பவனா அல்லது அவனுக்குப் பரிமாறுகிறவனா?

மேசையருகே உட்கார்ந்திருப்பவன் முக்கியமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் இயேசு, தாம் ஒரு வேலைக்காரனைப்போல இருப்பதாக கூறுவது ஏன்? என்னைத் தாழ்த்த நான் என்ன செய்கிறேன்?

எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். அதை நான் பெற்றிருக்கின்றேனா? பெற்றிருந்தால் என்ன செய்யவேண்டும்?

“நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்ற வார்த்தையின் படி எனது சகோதரரைப் பெலப்படுத்த நான் செய்வது என்ன?

ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாய்  இருக்கிறேன் என்று என்னால் கூறமுடியுமா?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin