ஆகஸ்ட் 30 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை ,

1இராஜா 14:1-17 15:28-30

யெரொபெயாமின் நாட்கள் முடிந்தன!

ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன். 1ராஜா.14:7

வீதியிலே நடுங்கிக்கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றைக் கண்டு, இரங்கி, வீட்டுக்கு எடுத்து வந்து, குளிப்பாட்டி, பாலூட்டி வளர்த்திருக்க, அது தன் எஜமானரைக் கோபங்கொண்டு கடித்துவிட்டால், அவர் என்ன செய்வார்? தனது மனைவியை கடித்துக் குதறிய தன் அன்பான நாயைத் தானே துவக்கினால் சுட்டுக்கொன்ற ஒருவருடைய சம்பவமும் உண்டு.

கர்த்தர் யெரொபெயாமுக்கு, அகியா மூலமாகச் சொன்ன வார்த்தைகள் இன்று நம்மைசிந்திக்க வைக்கட்டும். “ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல்என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன். நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்” என்றார் கர்த்தர். இதற்கு யெரொபெயாமுக்கு என்ன தகுதி இருந்தது? கர்த்தரேதான் அவனை உயர்த்தினாரே தவிர,  ராஜாவாகுவதற்கு அவன் எதுவும் செய்யவில்லை. இப்போ, யெரொபெயாமின் மகன் வியாதியில் விழுந்தான். பிள்ளைக்குச் சம்பவிப்பதை விசாரிப்பதற்கு, தனது மனைவியை, ராஜாவின் மனைவியாக காட்டிக்கொள்ளாதபடி வேஷம் மாறி அகியாவிடம் போகும்படி பணிக்கிறான். உலகுக்கு வேஷம் போடலாம்; கர்த்தருக்கு முன்பாக நமது வேஷங்கள் நிலைநிற்குமா? கர்த்தரோ அகியாவிடம், சங்கதியைச் சொன்னது மன்றி, அவள் தன்னை அந்நிய பெண்ணாகக் காண்பிப்பாள் என்றும் சொல்லிவிட்டார். அகியா கூறிய கர்த்தருடைய வார்த்தைகளையே இன்று வாசித்தோம். கர்த்தர் சொன்னபடியே மகனும் செத்தான், பாஷா என்று ஒருவன் எழும்பி, இவன் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்.

கர்த்தர் இவனிடம் எதிர்பார்த்தது என்ன? “நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் பார்வைக்குச் செம்மை யானதைச் செய்கிறதுண்டானால்” (1ராஜா.11:38). இந்த ஒன்றைத்தானே கர்த்தர் அன்றும் இன்றும் மனிதனிடம் கேட்கிறார். இன்று நாம் கர்த்தருடைய பிள்ளைகள், ராஜாக்களும் ஆசாரியர்களும் என்றெல்லாம் நம்மைக்குறித்துப் பெருமை பாராட்டுகிறோம். இந்த உன்னத ஆசி எங்கிருந்து கிடைத்தது? நாம் சம்பாதித்தோமா? அல்லது, நாம் இதற்குத் குதியானவர்கள்தானா? பாவசேற்றிலே கிடந்த நம்மை அவரே கண்டார்! அவரே நம்மை நேசித்தார்! இன்று தேவ பிள்ளை என்ற அங்கீகாரத்தை நாம் பெற்றுக்கொள்ள, கல்வாரியிலே ஒரு ஒப்பற்ற கிரயம் செலுத்தினார். அந்த அன்பார்ந்த தேவனிடம் நாம் நமது நேசத்தை அவருக்கு வெளிப்படுத்தவேண்டாமா? அதற்கு ஒரேவழி அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, சுத்த இருதயத்துடன் அவரை சேவிப்பது ஒன்றேதான். யெரொபெயாம் தவறிவிட்டான்; நாம் என்ன செய்கிறோம்?

💫 இன்றைய சிந்தனைக்கு:  

யெரொபெயாமின் ஆரம்பமும் முடிவும் என்னில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? கர்த்தருக்குப் பிரியமற்ற எதுவாவது என்னிடமுண்டா?

5 thoughts on “ஆகஸ்ட் 30 புதன்

  1. Sign up with promo code 1xBet and get a €/$130 bonus. Play sports betting, virtual sports and casino. 1xBet is offering a $130 welcome bonus to new customers. To receive the bonus, players must register on the 1xBet website, deposit money into their account, and confirm their right to receive the bonus. The bonus is then automatically credited to the player’s account. 1xbet free bet promo code today Thanks to the bonus code, the player’s chances are instantly increased by 130%. Additional bonuses offered under the same conditions as the main package bonus must be earned.

  2. Generally I don’t learn article on blogs, however
    I would like to say that this write-up very forced me to try and do so!

    Your writing taste has been amazed me. Thank you, very great post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin