📖 சத்தியவசனம் – இலங்கை
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 16:1-14
தள்ளப்பட்ட ராஜா
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர். ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். தானியேல் 2:21
ஒரு காட்சியகத்திற்குள் சென்ற ஒருவர், ஒரு அழகான சித்திரத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு நின்றார். பின்னர் தூரிகையை எடுத்து, பல மாற்றங்களைச் செய்தார். அது வேறு வடிவம் கொண்டு மேலும் அழகாகக் காட்சியளித்தது. “இந்தச் சித்திரத்தைத் தொடுவதற்கு உனக்கு யார் அனுமதி தந்தது” என்று மேற்பார்வையாளர் கோபத்தில் கொதித்தார். அதற்கு இவர், மிகவும் அடக்கமாக, “இந்தச் சித்திரத்தின் உற்பத்தியே நான்தான்” என்றார். அவரோ வாயடைத்துப்போனார்.
சவுலைத் தெரிந்துகொண்டு, ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தவர் கர்த்தர்; சகலகாரியங்களிலும் சாமுவேலைக் கொண்டு வழிநடத்தியவரும் கர்த்தர். ஆனால், சவுல் செய்த தவறு என்ன? விபசாரமோ, கொலையோ, கொள்ளையோ அல்ல; அவன் பெருமையினால் துணிகரம் கொண்டு, செய்யத்தகாததைச் செய்தான். இதனாலேதான் தள்ளுண்டான், தனது ராஜ மகுடத்தை இழந்தான். இதன் பின்னரே கர்த்தர், தாவீது என்ற வாலிபனை ராஜாவாக அபிஷேகம்பண்ண சாமுவேலை அனுப்புகிறார். இங்கே முக்கியமாக ஒரு விடயத்தை நாம் கவனிக்கவேண்டும். சவுல் தள்ளப்பட்ட பின்னர் தான் தாவீது அபிஷேகம் பெற்றார். மேலும், சவுல் ராஜ்பாரம் பண்ணியது 40ஆண்டுகள் (அப்.13:21). தாவீது சமஸ்த இஸ்ரவேலின் ராஜாவானபோது வயது 30 (2சாமு.5:4). ஆக கணக்கிட்டுப் பார்த்தால் சவுல் ராஜாவாகும்போது தாவீது பிறந்திருக்கவே வாய்ப்பில்லை. ஆக, சவுல் தனக்களிக்கப்பட்ட தருணத்தை இழந்துபோக, கர்த்தர், தாவீதைப் பிறப்பித்தார். கர்த்தருடைய ஞானத்தை என்ன சொல்ல! இவர் முன்னிலையில் பெருமை பாராட்டத் தக்கவன் யார்? பெருமையினால் சவுல் மகுடத்தை இழந்தான்; தாவீது அதைப் பெற்றான்.
நமது மகுடத்தை நாம் இழப்போமா? அல்லது ஜெயங்கொண்டு ஆண்டவரோடு கூட உட்காருவோமா? தானியேல் கூறியபடி, ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்து கிற இவர் யார்? ஆம், இவரே இந்தப் பிரபஞ்சத்தின் உற்பத்தியாளர். ஆகையால், தற்பெருமையை ஒழித்துவிடுவோம். பெருமைப்பட நம்மிடம் என்னதான் இருக்கிறது!பிலதெல்பியா சபைக்கு கர்த்தர், “ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு” (வெளி.3:11) என்றார். சிந்திப்போம்! கர்த்தர் நம்மைத் தள்ளிப்போடாதபடிக்கு, அவர் நமக்கென்று வைத்திருக்கிற கீரீடத்தை இழந்துவிடாதபடிக்கு, கர்த்தரையே பற்றிக்கொண்டு, தாழ்மையுடன் அவரைச் சேவிப்போமாக. நாம் மேன்மை பாராட்ட கிறிஸ்துவின் சிலுவையைத் தவிர நம்மிடம் எதுவுமே இல்லையே!
💫 இன்றைய சிந்தனைக்கு
எனக்கென்று ஆண்டவர் வைத்திருக்கின்ற என்னுடைய மகுடத்தை நான் இழப்பேனா? மகிமையோடு பெற்றுக்கொள்வேனா?
📘 அனுதினமும் தேவனுடன்.

biaxin over the counter
india pharmacy: world pharmacy india – best india pharmacy
Работа в Кемерово
top rated online pharmacies
Czy jestes gotowy, aby zanurzyc sie w ekscytujaca przygode
w verde casino, ktora oddaje istote rozrywki kasynowej jak
nigdy dotad? Nie szukaj dalej niz verde kasyno,
Twoj przewodnik po swiecie Verde Cassino, strategii
i ekscytujacej rozgrywce bonusowej Verde. Solverde pt oferuje
niezrownane wrazenia z gry, ktore lacza najnowoczesniejsza
technologie z urokiem tradycyjnych gier kasynowych. Verde kasyno
ma do zaoferowania cos innego dla kazdego.
https://play.google.com/store/apps/details?id=verdecasino.verde.verdekasyno.play.ver&gl=pl&hl=pl-PL